Ads Here

ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

குழந்தை ஆணா பெண்ணா: இயற்கையும் முரண்பாடுகளும் || aana penna tamil

குழந்தை ஆணா பெண்ணா || aana penna tamil 

குழந்தை பிறப்பு நேரத்தில் லக்ன உதயம் 1 அ 3 ஆம் பாதம் ஆண் குழந்தை. அதற்கு மாறாக, 2 அ 4 ஆம் பாதம் பெண் குழந்தை.  தவறாமல், பிறக்க போவது ஆணா பெண்ணா அறியலாம்.


அதை தொடர்ந்து, 


குழந்தை பிறந்த நாழிகை வினாலிகை கணக்கிட்டு அறியலாம்...


உதாரணமாக, வேறு வகையில் என நீளும் பட்டியலுக்கு பஞ்சமே இல்லை. 


ஜோதிட ரீதியாக கணிக்க இயலுமா? 


நடைமுறை வாழ்க்கைக்கு இது சாத்தியமா?

kp astrology in tamil

GENDER: FEMALE / 09,02,1997 / 07,14,55 PM /DINDIGUL.... 


பெண் குழந்தை பிறந்த 01 நிமிடம் 26 வினாடி வித்தியாசத்தில் ஆண் குழந்தை பிறப்பு என்பதை அறிக....

kp astrology tamil

GENDER: MALE / 09,02,1997 / 07,16,21 PM / DINDIGUL...


பிறக்க போவது ஆணா பெண்ணா அட்டவணை 


" பிரசவத்தில் இரட்டை குழந்தை ஒன்னு ஆண் ஒன்னு பெண் " எனும் கூற்றை அல்லது செவிவழி செய்தியை அனைவரும் அறிந்த ஒன்றே, நடைமுறை வாழ்க்கை உண்மை. மாற்று கருத்துக்கு வாய்ப்பே இல்லை....


ஜோதிட ரீதியாக பிறக்க போவது ஆணா பெண்ணா என்பதை கணிக்க இயலாது. காக்கா உட்கார பணம் பலம் விழுந்த கதைதான். ஆணா பெண்ணா கணிக்க இயலும், ஜோதிட ரீதியாக அட்டவணை உண்டு என்றால், மேற்கண்ட லக்ன பாதம் நாழிகை மற்றும் எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா அட்டவணை பயன்படுத்தி குறைந்தது 5 ஜாதகத்தில் கூட துல்லியமாக கணிக்க இயலுமா? வாய்ப்பே இல்லை.....


காரணம்....


லக்னம் நின்ற (13.20 பாகை) நட்சத்திரம் 52 நிமிடங்கள். ஒரு நட்சத்திரம் 4 பாதங்களை கொண்டது. லக்னம் நிற்கும் ஒரு (03.20 பாகை) நட்சத்திர பாதம் 16 நிமிடம்....


சாத்தியமா கணிப்பது?


01 நிமிடம் 26 வினாடி வித்தியாசத்தில் மாறுபட்ட பாலினம் என்பதே உண்மை. நிமிடம் வினாடி மினிமம் 3௦ வினாடி வித்தியாசத்தில் ஆண் பெண் முதல் ஒவ்வொரு மனிதனின் குணம் சிந்தனை என்ன ஓட்டம் மனப்பான்மை மற்றும் அனுபவிக்கும் யோகம் முதல் அனைத்தும் மாறுபடுகிறது வித்தியாசப்படுகிறது என்பதே உண்மை....    


ஜாதகத்தில் திரிகோணம் (திரிகோணம் பொருள்)


ஜாதகத்தில் திரிகோண பாவங்கள் ஜாதகரை பற்றிய லக்ன பாவம் 1 ஆம் பாவம் புத்திர பாவமான 5 ஆம் பாவம் பித்ரு பாவமான 9 ஆம் பாவங்கள் இயற்கையான பாவங்கள் ஆகும். அதாவது கடவுளால் படைக்கப்பட்ட பாவங்கள் அந்த பாவகங்களில் உள்ள காரகங்கள்....


இயற்கையை ஜோதிடத்தால் கணிக்க இயலாது. இயற்கை ஜோதிட வரையறைக்குள் கட்டுபடாது என்பதே உண்மை. உதாரணமாக ஜாதகருக்கு இயற்கையாக அமைந்த குணம் நோய் எதிர்ப்பு திறன், சந்ததி தொடருமா இல்லையா, இந்த வீட்டில் இந்த நபருக்கு மகனாக மகளாக ஏதேனும் ஒன்றையேனும் தீர்மானிக்க இயலுமா.....


இயற்கை முறையில் கருத்தரிக்க காரக கிரகம் குரு என்பர். குரு பகவான் புத்திரகாரக கிரகம் என்பர். குரு பகவான் முழுமையான ஒரு இயற்கை சுப கிரகம் என்பர். இங்கே இயற்கை என்ற வார்த்தையை கவனிக்க, 5 ஆம் பாவத்திற்கு காரக கிரகம் குரு என்பதை அறிக....


ஜோதிடத்தில் பலன் சொல்லும் முறை 


ஆராய்ச்சி ஜோதிடர் என்பவர் ஒரு ஜோதிட விதியை குறைந்தது 1௦ ஜாதகத்திலாவது நிருபிக்க முயலுவது ஆராய்ச்சி ஜோதிடத்திற்கு அழகு சேர்க்கும்...


ஜோதிடம் என்பது அறிவியல் சார்ந்தது. நிமிடம் வினாடி என கர்மா அதாவது விதி கொடுப்பினையும் அந்த விதி கொடுப்பினையை கர்மா அமைப்பை அவ்வப்பொழுது காட்டும் மதி கொடுப்பினையும், ஒவ்வொரு 3௦ வினாடிகளில் ஒவ்வொரு மனிதனுக்கும் மாறுபடும் வித்தியாசப்படும் என கூறி முதல் பகுதியை நிறைவு செய்கிறேன்....


ஜோதிடம் முக்கியமாக ஜோதிடர் கணிக்க வரையறை:

அலி கிரகம் புதன் அதை தொடர்ந்து சனி மந்த கிரகம் உதாரணத்திற்கு...தவிர ராகு கேது இயற்கைக்கு ஒத்திராத செயற்கை கிரகங்கள். சூரியன் குரு செவ்வாய் ஆண் கிரகங்கள். சந்திரன் சுக்கிரன் பெண் கிரகங்கள்...


லக்னம் அ லக்ன பாவம் ஜாதகர் அ ஜாதகியின் உடல் வாகு, ஆண் பெண் தன்மையை காட்டும். அதை தொடர்ந்து, 5 ஆம் பாவம் ஜாதகரின் பாலின ஹார்மோன்களை காட்டும். மேலும், 7 ஆம் பாவம் ஜாதகரின் எதிர் பாலினத்தின் சேர்க்கையை காட்டும். முக்கியத்துவம் வாய்ந்த 9 ஆம் பாவம் ஜாதகரின் மரபணுவை (தந்தை தாத்தா முன்னோர்களின் பண்புகள்)....  


இவற்றுகெல்லாம் ஒரு சில கிரகங்கள் பாவ உப நட்சத்திரம் அ உப நட்சத்திரம் நின்ற நட்சத்திரம் அ உப நட்சத்திரங்களாக கூடுதலாக இருந்து தொடர்பு கொண்டால்...

இதன் காரணமாக ஏற்படும் விளைவுகள் - மற்றொரு பதிவில் 


ஆளும் கிரகங்களும் பிறந்த நேரம் சரி செய்தலும் 


பதிவின் அடுத்த பகுதியில் லக்னம் முதல் 12 பாவங்களும் 52 நிமிடம் உள்ள நட்சத்திரத்தில் ஆரம்பித்து 3௦ வினாடிகள் கொண்ட உப உப உப நட்சத்திரத்தில் முடிகிறது என்பதையும், 3௦ வினாடிகளில் ஒவ்வொரு ஜெனனமும் மாறுபடுகிறது என்பதையும், நிமிடம் வினாடி என துல்லியமாக கர்மாவை விதி மதி கொடுப்பினையை எவ்வாறு அறியலாம் என்பதையும் காணலாம்...    

12 பாவங்களின் உப நட்சத்திர பிரிவு முறை அ கேபி அட்வான்ஸ்...


 பாரம்பரியம் / நாடி / கேபி அட்வான்ஸ்

 சி,காளிதாஸ்....

  875246377...



  

         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..

.