Ads Here

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

திரிகோணாதிபதிகள் vs திரிகோணம் கேந்திரம் / விதிகளும் நடைமுறையும்




பொதுபலன் அ பொதுப்பலன் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவராத பலன்

தலைப்பு
பொதுப்பலனும் நடைமுறை பலனும்
பொதுபலன் அ அடிப்படை ஜோதிட விதிகள்
ஜோதிட விதிகளும் நடைமுறையும்

பொதுபலன் அ ஜோதிட விதி 
லக்னாதிபதி எனப்படும் 1 ஆம் பாவாதிபதியும் பூர்வ புன்னிய ஸ்தானாதிபதி எனப்படும் 5 ஆம் பாவாதிபதியும் சேர்கை அ இணைவு பெற்று கேந்திரம் அ திரிகோண ( பாவத்தில் ) பாவங்களில் இருந்தால் ஜாதகர் புத்திரர்கள் அதாவது வாரிசுகளால் மகிழ்ச்சி மற்றும் குறையே இல்லாத சுகத்தையும் அடைவார்.

திரிகோணம் மற்றும் கேந்திரம்
ஜாதகமென்னும் கட்டிடத்தை தாங்கி பிடிக்கும் அடிப்படை தூண்கள். கேந்திர திரிகோண ஸ்தானங்கள் வலு பெறுவது நன்மை ஆகும்.

திரிகோணாதிபதிகள் மற்றும் ஒற்றைப்படை பாவங்கள் வலு பெறுதல் 
1 மற்றும் 5 ஆம் பாவாதிபதிகள் சேர்கை பெறுவதே திரிகோணம் வலு பெறுவதாகும் மேலும் சுபர்கள் பார்வை திரிகோணதிபதியான 9 ஆம் பாவாதிபதி சேர்கை பார்வை 1 5 ஆம் பாவாதிபதிகள் அமர்ந்த பாவத்திலிருந்து 1 5 9 / 2 7 / 3 11 ஆம் பாவங்களில் 9 ஆம் அதிபதி இருந்தாலும் சேர்க்கையே அஷ்டலட்சுமி யோகம் ஆகும். மேலும் குரு சுக்கிரன் போன்ற சுபர்கள் பார்வை சேர்கை ஒற்றைப்படை பாவங்களான 1 3 5 7 9 11 போன்ற ஸ்தானங்களும் வலிமை பெறுவதும் நன்மையாகும். திரிகோணத்தில் இந்த சேர்கை அ ஒற்றைப்படை பாவங்களான  1 3 5 7 9 11 பாவங்களில் சேர்கை பெறுவதும் வலுவாகும் சாதகமான பலன் அ பலன்கள் தரும்.

ஆக திரிகோண பாவங்களான 1 5 9 பாவங்களில் திரிகோணாதிபதிகள் சேர்கை பெறுதல் பலம் தரும். மேலும் கேந்திர பாவமான 7 ஆம் பாவத்தில் திரிகோணாதிபதிகள் இணைவு பெற்று இருப்பதுவும் பலம் தரும் ஆனால்,

கேந்திரம் 4 10 ஆம் பாவத்தில் சேர்கை அ இணைவு பலனா?
எந்த ஒரு பாவத்துக்கும் அதிலிருந்து வரும் 4 மற்றும் 10 ஆம் பாவங்கள் அந்த பாவத்தை ஒரு குறிப்பிட்ட அளவே வளர்க்கும் அ வலிமை படுத்தும் / மேலும் எந்த ஒரு பாவத்துக்கும் அந்த பாவத்திலிருந்து வரும் 12 4 மற்றும் 8 ஆம் பாவங்கள் அந்த குறிப்பிட்ட பாவத்தை அதன் இயல்பில் இயங்க விடாமல் தடுக்கும் / மேலும் ஒற்றைப்படை பாவங்களுக்கு அதிலிருந்து வரும் 6 ஆம் பாவம் கெடுபலன்களை தரும் அதாவது தீமையை தரும் ( ஒற்றைப்படை பாவங்கள் 1 3 5 7 9 11 ஆம் பாவங்கள் )

6 மற்றும் 1௦ ஆம் பாவங்கள் 
இங்கு 1 ஆம் அதிபதி மற்றும் 5 ஆம் அதிபதி 4 ஆம் பாவத்தில் அதாவது கேந்திரத்தில் சேர்கை பெறுவதும், 1௦ ஆம் பாவத்தில் அதாவது 1 ஆம் பாவத்துக்கு 1௦, 5 ஆம் பாவத்துக்கு 6 ஆம் பாவத்தில் சேர்கை பெறுவதும் அதாவது 4 7 10 எனும் கேந்திர பாவங்கள் திரிகோண பாவங்களுக்கு வலிமை தராது மாறாக கெடுபலன்களையே தரும்

இரட்டை படை மற்றும் ஒற்றைப்படை 
மேலும் ஒற்றைப்படை பாவங்களை தடுப்பதும் கெடுபலன்களை தருவதும், இரட்டைபடை பாவங்களாகும்.இரட்டை படை பாவங்களை தடுப்பதும் கெடுபலன்களை தருவதும் ஒற்றைப்படை பாவங்களாகும்.

இங்கு திரிகோண 5 ஒற்றைப்படை தடுப்பது கேந்திரம் 4 இரட்டை படை 

கேந்திராதிபதி தோஷம் 
மேலும் 1 மற்றும் 5 ஆம் அதிபதிகள் அ பாவாதிபதிகள் சுபர்களாக இருப்பின் கேந்திர ஷ்தானமான 4 7 10 ஆம் பாவங்களில் இருப்பது கேந்திராதிபதி தோசமாகும்.

1 மற்றும் 5 ஆம் பாவாதிபதிகள் திசை புத்தி மற்றும் அவர்கள் சாரம் பெற்ற அ ஏறிய கிரகங்களின் திசா அ புத்தி காலங்களில் கேந்திராதிபதி தோசத்தால் கெடுபலன்களே நிகழும்.

உதாரன லக்னங்கள்
ரிஷிபம் துலாம் சுக்கிரன் / மிதுனம் கன்னி பாவிகளுடன் சேர்கை பெறாத  தனித்த புதன் / கடகம் வளர்பிறை சந்திரன் / தனுஷு மீனம் குரு / மேலும் 5 9 ஆம் பாவங்களின் பாவாதிபதிகள்  சுபர்களாக இருத்தல் எந்த லக்னம் என்றாலும். 

ஜோதிட விதிகளும் ( பொதுப்பலன்களும் )  நடைமுறை பலன்களும் 
ஜோதிடப் பலன் மாறி நடக்கும் / பொதுப்பலன் அ ஜோதிட விதி நடைமுறைக்கு ஒத்து வராத பலனாகும் / ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது / தனிப்பட்ட ஜோதிட ஆய்வே நடைமுறை பலன் தரும்.

ஷேர் செய்யவும் அனைவருக்கும் ஜோதிடம் என்னும் அறிவியல்

பாரம்பரியம் + நாடி + கேபி நிபுனன்
சி,காளிதாஸ்


பதிவுகள் தம்மை வந்தடைய follow option அ mail முறையில் subscription செய்யவும். கமெண்ட்ஸ் செய்யவும் ஜோதிட பதிவு சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் தரப்படும்.         




















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..

.