![]() |
| ஜாதகத்தில் 6 ஆம் இடம் வெற்றியை தரும் |
ஜாதகத்தில் 6 ஆம் இடம்:
லக்னத்தில் இருந்து எண்ணி வரும் 6 ஆம் இடம் அ வீடு ஒரு மனிதனின் வாழ்வில் ஏற்படும் கடன் அதன் மூலம் ஏற்படும் பகை வம்பு வழக்கை குறிப்பிடும்....
மேலும், 6 ஆம் இடம் அ வீடு அ பாவம் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நோய் கிரிமிகளை எதிர்த்து போராடும் வெள்ளை அணுக்கள் குறைபாட்டால் மனிதன் சந்திக்கும் நோய் நொடிகளையும் குறிப்பிடும்....
ஜாதகத்தில் எதிரி:
ஜாதகத்தில் 7 ஆம் பாவம் ஜாதகருக்கு சமமான எதிரிகளை குறிப்பிடும். 7 க்கு 12 ஆம் இடமான 6 ஆம் இடம் ஜாதகருக்கு சமமில்லாத எதிரிகளை குறிப்பிடும்...
அதாவது, 7 ஆம் இடம் கண்ணுக்கு தெரிந்த எதிரி என்றால் 6 ஆம் இடம் கண்ணனுக்கு தெரியாத துரோகிகளையும் குறிப்பிடும்...
ஜாதகத்தில் 6 ஆம் வீடு:
நோய் கிரிமிகளை விரட்டும் ஆங்கில மருந்து மாத்திரை மற்றும் ஆங்கில மருத்துவர்கள். மாத சம்பளம், வாடகை மூலம் வருவாய், விவசாயம், விவசாயம் துணை தொழில்கள் மற்றும் செல்ல பிராணிகள் வளர்ப்பு, சமையல், உடல் உறுப்பில் வயிறு மற்றும் செரிமான மண்டலங்கள் என இதர முக்கியமான காரகங்களை உள்ளடக்கியது ஆகும்....
6 ஆம் பாவம் அரசு வேலை :
6 ஆம் பாவம் போட்டியிட்டு எதிரிகளை வீழ்த்துவதையும் குறிக்கும். ஆக, அரசாங்க வேலை பெறுவதற்கு எதிர்கொள்ளும் போட்டி தேர்வுகள் மற்றும் போட்டி தேர்வில் வெற்றி என அனைத்து விசயங்களையும் குறிப்பிடும்...
ஜாதகத்தில் 8 ஆம் இடம்:
6 ஆம் பாவம் நோய் கடன் பகை வம்பு வழக்கு என்றால், அதன் பரிணாம வீடு அ பாவம் அ இடம் ஜாதகத்தில் 8 ஆம் இடம் எனலாம்...
6 ஆம் பாவம் மறைவு ஸ்தானமா?
பாவத் பாவக பலன்:
கடன் பட்டு மனிதன் பொருளாதார ரீதியாக வெற்றி பெருவதற்கும், கடன் விருத்தி அதன் மூலம் வம்பு வழக்கு கோர்ட் கச்சேரி பகைன்னு தோல்வியை சந்திப்பதற்கும் வித்தியாசம் என 2 வகை உண்டு...
மேலும்,
நோய் வருவதுண்டு நோய் எதிர்ப்பு சக்தியாலும், ரத்த வெள்ளை அணுக்களாலும் தேவைபட்டால், மருந்து மாத்திரையால் விரட்டப்படும் நோய் கிரிமிகளும் உண்டு...
மாறாக, மேற்கண்ட எவற்றாலும் பயன் இல்லாமல் முற்றும் நோய் (மருந்து மாத்திரை மூலம் மருத்துவர் மூலம் குணப்படுத்த இயலாமை) மேலும், உறுப்புகளை வெட்டி எடுத்தல் என 2 வகை உண்டு....
6 ஆம் இடம் உங்கள் வெற்றிக்கான இடம். ஜோதிடம் பற்றிய புரிதல் இன்மையாலும், தவறான ஜோதிட கணிப்பாலும் நீங்கள் எமாற்றபடலாம்....
கடன் பெறாமல் ஒரு மனிதன் வாழ்கையில் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் காண இயலாது. ஆனால், கடனால் பிரச்சனையா? கடன் வட்டி என குட்டி போடுமா? அதனால் பகை வம்பு வழக்கு கோர்ட் கச்சேரி என அனைத்தையும் காண்பிப்பது 6 ஆம் பாவம் POS அ NAG சார்ந்தது....
6 ஆம் பாவம் அதன் பரிணாமம் 8 ஆம் பாவம்...
இன்னொரு பதிவில் தொடரும்.....
++++++++++++++++++++++++++++++++++
2௦23 சனி பெயர்ச்சி பலன்கள் || எதிர்பார்ப்பும் நடைமுறை நிகழ்வும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
மாங்கல்ய தோஷம் // தார தோஷம் // தவிர்க்கும் ஜாதகங்கள்
++++++++++++++++++++++++++++++++++++++++
ராகு கேது பலம் // ராகு கேதுவால் பலம் இழக்கும் கிரகங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் ஜோதிட ஆரோக்கியம் மற்றும் வளர்சிக்கு தேவையற்ற எதிரான ஒண்டு:
++++++++++++++++++++++++++++++++++++++
சனி பெயர்ச்சி 2023 to 2026 || sani peyarchi palangal 2023 to 2026 in tamil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..