சனி பெயர்ச்சி 2023 to 2026 || sani peyarchi 2023 / தேவையற்ற பயமே |
சனி பெயர்ச்சி 2023 to 2026 || sani peyarchi 2023
சனி பெயர்ச்சி வருகிற 17 01 2023 அன்று மகரம் ராசியில் இருந்து கும்ப ராசியில் சஞ்சாரம் செய்து, தனது 3 7 1௦ ஆம் பார்வையால் முறையே மேஷம், சிம்மம், விருச்சிகம் ராசிகளை பார்வை செய்வார்....
குரு அமர்ந்த இடம் பாழ பார்வை சிறப்பு என்பர். சனி அமர்ந்த இடம் சிறப்பு பார்வை செய்யும் இடங்கள் பாழ என்பர். மேலும், சில ராசிகளுக்கு நன்மை தீமை செய்ய சனி செய்வதும் செய்யாமல் போவதும் அறிவியல் ரீதியாக இந்த பதிவில் அடுத்து அறிவோம்...
அடுத்த சனி பெயர்ச்சி எப்போது 2023:
திருகணிதம் (திருத்தம் செய்யப்பட்ட கணிதம்) பஞ்சாங்கம் முறையில் சனி பெயர்ச்சி வருகிற 17 01 2023 அன்று மகரத்தில் இருந்து கோட்சார பெயர்ச்சி சனியானவர் கும்பத்தில் ஏப்ரல் 2025 வரை சஞ்சாரம் செய்யவிருக்கிறார்...
வாக்கிய பஞ்சாங்கம் முறையில் வருகிற ஏப்ரல் 2023. நடைமுறை பலன்களுக்கும் வாக்கிய பஞ்சாங்கதிற்கும் ரொம்ப தூரம். ஆக, சனி பெயர்ச்சி ஜனவரி மாதம் 17 ஆம் தேதி 2023 அன்று என்பதே அறிவியல் உண்மை...
சனி பெயர்ச்சி 2023 to 2026 பலன்கள்:
2023 கும்பம் பெயர்ச்சி சனி பெயர்ச்சியில்....
ஏழரை சனி யாருக்கு என்ன செய்ய இருக்கு?
ஏழரை சனி ஆரம்பம் ஆகும் மீனம் ராசியையும் சேர்த்து மகரம் கும்பம் மீனம் 3 ராசிக்கு ஏழரை.என NAG அ POS பலன்கள் சொல்லிட்டு போகட்டும். 3 ராசியும் சேர்த்து 180 கோடி மனிதர்கள்.
எல்லோருக்கும் ஒரே பலனா?
சிந்தியுங்கள்...
சரி, ஒவ்வொரு ராசிக்கும் தனிதனி பலன். ஒவ்வொரு ராசியும் 6௦ கோடி மனிதர்களை உள்ளடக்கியது. எல்லோருக்கும் ஒரே பலனா?
உடனே அவரவர் தசா புத்திக்கு ஏற்றவாறு மாறுபடும் என ஒரு சமாளிப்பு பதில் வெளிப்படும். அதாவது, நடப்பு திசா புத்திக்கு ஏற்றவாறே நன்மை தீமை ஏழரை சனியால் நடக்கும் என்பது வெளிப்படும் பலன்கள்....
மொத்தத்தில் எந்த ஒரு ராசியை சார்ந்த மக்களுக்கும் ஒரே பலன் நடக்காது என்பது திசா புத்தி என ஒரு சில வார்தைகளின் வெளிபாடிலேயே தெரிய வரும்....
அனுமானம் தாண்டிய அறிவியல் ரீதியாக விளக்கம் தரும் அவசியம் கூட ராசிபலனை அடிப்படையாக வைத்து சொல்லப்படும் கிரக பெயர்ச்சி பலன்களுக்கு தேவைபடாது.....
ஏழரை சனி, அஷ்டமசனி, கண்டகசனி, அர்தாஷ்டம சனி:
முக்கியமா, ஒவ்வொரு சனி பெயர்சியிலும் சனி பகவானை வைத்து காட்டப்படும் ஏழரை சனி அஷ்டமசனி கண்டகசனி அர்தாஷ்டமசனி பயங்கள் தேவையில்லாத ஒன்று....
மீன ராசி ஏழரை சனி காலம் 2023?
மகர ராசி ஏழரை சனி எபோது முடியும்?
அடுத்து ஏழரை ஆண்டுகள் பயம் காட்டப்படும் மீன ராசி அன்பர்கள் ஆகட்டும், அதை தொடர்ந்து, அடுத்த ஐந்து வருடத்திற்கு பயம் காட்டப்படும் கும்ப ராசி அன்பர்கள் ஆகட்டும்....
நடைமுறை வாழ்கையில் நிகழும் இன்ப துன்பங்களுக்கும் சனியை வைத்து காட்டப்படும் பயங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கோட்சார பெயர்ச்சி சனியை வைத்து காட்டப்படும் பயங்கள் அனைத்தும் பலன்கள் துல்லியமாக கணிக்க இயலாமையின் ஜோதிட சமாளிப்பு யுக்தி....
ஆம், 3௦ வினாடிக்கு முன் பூமியில் அவதரித்த ஒரு மனிதன் மீது கூட நன்மை தீமை என எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்த இயலாதவை. ஆம், சனி முதல் அனைத்து கிரகங்களுக்கும் இது பொருந்தும்...
ஆம், மனிதன் பிறந்த 6௦ நிமிடங்களில் ஒரு குறிப்பிட்ட நிமிடத்தில், அந்த குறிப்பிட்ட நிமிடத்தில் உள்ள 6௦ வினாடிகளில் குறிப்பிட்ட ஒரு சில வினாடிகளில் ஒரு மனிதனின் விதி கொடுப்பினையும் அதை அவ்வப்பொழுது செயலாக்கும் மதி கொடுப்பினையும் வரையறுக்கபட்டு விடுகிறது என்பதே அனுமான பலன்களை கடந்த அறிவியல் ஜோதிட உண்மை...
ஆம், அறியாமையின் வெளிபாடு மற்றும் ஜோதிட ஆராசியின்மையின் காரணத்தால் சனி பகவான் மேல் தேவையற்ற கருப்பு சாயம் பூசப்படுகிறது என்பதே மறுக்க இயலாத அறிவியல் உண்மை....
ஏன் எப்படி என விளக்கங்கள் பதிவின் நீளம் கருதி மற்றொரு பதிவில் காணலாம்...
ஜோதிடம் அறிவியல். அனுமானம் கடக்கும் பொழுதே அறிவியல் தென்படும்....
++++++++++++++++++++++++++++++++++
2௦23 சனி பெயர்ச்சி பலன்கள் || எதிர்பார்ப்பும் நடைமுறை நிகழ்வும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
மாங்கல்ய தோஷம் // தார தோஷம் // தவிர்க்கும் ஜாதகங்கள்
++++++++++++++++++++++++++++++++++++++++
ராகு கேது பலம் // ராகு கேதுவால் பலம் இழக்கும் கிரகங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் ஜோதிட ஆரோக்கியம் மற்றும் வளர்சிக்கு தேவையற்ற எதிரான ஒண்டு:
+++++++++++++++++++++++++++++++++++++++++
ஜோதிடம் கற்க வேண்டுமா? ஜோதிடம் அறிவியல் என்பதை உணர வேண்டுமா? கற்றது கையளவே, ஜோதிடத்தில் கற்று தருவதும் கையளவே:
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..