Ads Here

திங்கள், 22 ஜனவரி, 2018

பாரம்பரிய ஜோதிட பொதுப்பலன்களும் வேத ஜோதிட சூட்சம பலன்களும் 2


அடிப்படை வேத ஜோதிடம் ( பொது ) பலன்கள்:
பதிவு 2 

உதாரனம்:
சுக்கிரன் ( கிரகம் ) 5 ( பாவம் அ ராசி கட்டம் ) ஆம் பாவத்தில் இருப்பது.

சுக்கிரன் லக்னத்திலிருந்து 5 ஆம் பாவத்தில் இருந்தால்
1 கலைகளில் ஆர்வம் இருக்கும்.

2 கலைகளில் ( சினிமா பாடல் கவிதை etc..) போன்ற கலைகள் முலம் சிரமமின்றி சம்பாதித்தல்.

3 பெண்குழந்தைகள் அதிகம் இருக்கும்.

4 குல தெய்வம் பெண்குழந்தையாக இருக்கும்.

5 கும்ப லக்னமாக இருப்பின் சுக்கிரன் 5 ஆம் பாவமான மிதுனத்தில் இருந்தால் காதல் மற்றும் பாலின வேட்கையால் இரு தாரம் அ பெண்கள் சகவாசம் போன்றவை அடிப்படை ஜோதிடங்களில் பாவங்களில் கிரகங்கள் இருப்பதை வைத்து ஜோதிட பலன்கள் உரைகப்படுகின்றன.

( 5 ஆம் பாவம் " பாலின ஹார்மோன்களை குறிக்கும் " என்பதால் )

               









நடைமுறை வாழ்கையில் அடிப்படை ஜோதிட பங்கு:
அடிப்படை ஜோதிட பலன்கள் பெரும்பாலும் நடைமுறை வாழ்கையில் ஒத்து வருவதில்லை. காலப்போக்கில் அதன் விளைவே அடிப்படை ஜோதிடம் முன்றாம் தரமான பொதுபலன்கள்  என ஜோதிட மேதைகளால் (ஆராய்ச்சியாளர்கள்) அழைக்கப்பட்டது .


ஆதியில் வேத ஜோதிடத்தின் பரிணாமம்:
பிருகு முனிவரால் " பிருகத் சம்ஹிதை " வராஹமித்திரர் வானியல் ஆராய்ச்சின் விளைவு மாற்றம் " வராஹி பிருகத் சம்ஹிதை " பராசாரர், ரிஷிகள் etc...

லக்னம் கண்டுபிடிப்பு .....

" சாரம் பாரான் சோரம் போவான் " வானியல் ஜோதிட பழமொழி
ஒரு கிரகம் தான் நின்ற நட்சத்திரம் வேலையை முதன்மையாக செய்யும் 70% அடுத்து தன் வேலையை செய்யும் 30%

அடுத்தடுத்த ஜோதிட பரிணாமங்கள் ....


" சாரம் பாரான் சோரம் போவான் "
இந்த பழமொழியும் பழமொழியில் இடம்பெற்ற " சாரம் " என்ற ஜோதிட வார்த்தை உதாரனம் மட்டுமே போதுமானது, ஜோதிட பரிணாமங்கள் ஆதியில் இருந்தே தொன்று தொட்டு நிகழும் நிகழ்ந்த சம்பவம் என்பதற்கு.

" பழமொழி " மற்றும் " சாரம் " சொல்லின் காலம்?

முன் பதிவில் பழமொழிக்கும் கேள்விக்கும் உண்டான சம்பந்தம்: 
காரணம் கடந்த 20 ஆம் நுற்றாண்டில் தான் ஜோதிட சக்ரவர்த்தி கலியுக வராஹமித்திரர் ஐயா கிருஷ்ணமூர்த்தி அவர்களால் உப சாரம் ஜோதிடம் (கேபி ஜோதிடம்) ஜோதிட உலகிற்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது. உண்மையில் ஆதியிலேயே " ஆளும் கிரகங்கள் துணை கொண்டு பிறந்த நேரம் சரி செய்தல்" ஜோதிட கலை இருந்துள்ளது. ஐயா புதையுண்ட கலையையும் மேலும் சார ஜோதிடத்தின் ( வேத ஜோதிடம் ) பரிணாமம் உப சார ஜோதிடத்தையும் ( கேபி ஜோதிடம் ) ஜோதிட உலகிற்கு சமர்ப்பித்தார்.


சமாளிப்பு யுத்தி:
சார ஜோதிடம் என்றால் அது கேபி பாரம்பரிய ஜோதிடம் அ பராசாரர் ஜோதிடம் என்று அழைக்கப்படும் வேத ஜோதிடத்திற்கும் சாரத்திற்கும் சம்பந்தமில்லை என்ற வார்த்தை, மேலும் கிரக பெயர்சிகளை மட்டுமே வைத்து மேலும் திசா அ புத்தி நாதர்களின் ஆதிபத்யங்களை மட்டுமே முதன்மையாக வைத்து மேலும் கிரகங்கள் பாவங்களில் இருப்பதை வைத்து சொல்லப்படும் பொதுப்பலன்களை மட்டுமே ஜோதிட முதன்மை பலன்களாக  உரைக்கும் அதாவது ஜோதிடம் என்னும் கடலை ஜோதிட குட்டையாக்கும் அரை குறை   ஜோதிடர்களின் சமாளிப்பு யுத்தியே சாரத்திற்கும் வேதத்திற்கும் சம்பந்தமில்லை என்பது.


முதன்மை ஜோதிட பலன்கள்:
" சாரம் பாரான் சோரம் போவான் "

வேத ஜோதிடம் ( சாரம் வரை )
1 ஒரு கிரகம் தான் நின்ற நட்சத்திர நாதனின் வேலையை அதாவது நட்சத்திர நாதன் ஆதிபத்யங்கள் மற்றும் நட்சத்திர நாதன் அமர்வு பாவ வேலையை 70% செய்யும்.

2 ஒரு கிரகம் தனது ஆதிபத்யங்கள் மற்றும் தான் அமர்ந்த பாவ வேலையை 30% இரண்டாம் தரமாக செய்யும் 

பாரம்பரியம் ஜோதிடம் அ பராசாரர் ஜோதிடம் என்று அழைக்கப்படும் வேத ஜோதிடம் முதல் வேத ஜோதிடத்தின் பரிணாமமான கேபி ( கிருஷ்ணமூர்த்தி பத்ததி )  ஜோதிடம் வரை ஒரு பாவ ( விதி ) கொடுபினையையும் திசா புத்தி ( மதி ) கொடுபினையையும் துல்லியமாக அறிய சாரம் ( வேத ஜோதிடம் ) ஒரு கிரகம் நின்ற நட்சத்திரம் அ நட்சத்திரநாதன் என்ற முறையிலயே பலன்கள் கணிக்கப்படுகின்றன.

துல்லிய பலன் கணிப்பில் நாடி ஜோதிடத்தின் பங்கு:
எந்த கிரகமும் எந்த ஒரு பாவமும் தனித்து இயங்காது. நாடி கிரகச் சேர்கை விதிகளும், காலபுருஷ தத்துவ விளக்கங்களும் மேலும் வேத ஜோதிடத்திற்கு துல்லிய பலன் கணிக்க பயன்படுகிறது.


கேபி ஜோதிடம் ( உப சாரம் )
கேபி அட்வான்ஸ் பாவங்கள் வகையில் நடைமுறை முதன்மை ஜோதிட பலன்கள்:
1 ஒரு கிரகம் தான் நின்ற நட்சத்திரம் அதாவது நட்சத்திரநாதன் மற்றும் உப நட்சத்திரநாதனின் வேலையை 70% முதன்மையாக செய்யும்.

2 ஒரு கிரகம் தனது ஆதிபத்யங்கள் மற்றும் தான் அமர்ந்த பாவ வேலையை 30% இரண்டாம் தரமாக செய்யும் 

உப சாரம் ( கேபி ஜோதிடம் ) ஒரு கிரகம் நின்ற நட்சத்திரம் மற்றும் அதன் உப நட்சத்திரம் மட்றும் பாவங்களின் உள் தொடர்புகள் மற்றும் பாவங்களின் விரிவான உள் தொடர்புகள் என சாரம் உப சாரம் என்ற முறையிலயே மேலும் நடைமுறை வாழ்கையின் துல்லிய பலன்கள்  கணிக்கப்படுகின்றன.


பதிவு 3
பதிவின் நீளம் கருதி அடுத்த பதிவில் அடிப்படை ஜோதிடம்  அ பொதுப்பலன் விளக்கம் " சுக்கிரன் லக்னத்திலிருந்து 5 ஆம் பாவத்தில் இருந்தால் " விளக்கம்.


பாரம்பரியம் + நாடி + கேபி நிபுணன்:
சி,காளிதாஸ்.

                   
பதிவுகள் தம்மை வந்தடைய " follow option " கிளிக் ( subscribe ) செய்யவும் அ email முறையில். கமெண்ட்ஸ் செய்யவும் பதில் தரப்படும்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..

.