Ads Here

திங்கள், 22 ஜனவரி, 2018

அடிப்படை ஜோதிட பொதுப்பலன்களும் ஜோதிட சூட்சம பலன்களும் 3


பதிவு 3 

தலைப்பு:
அடிப்படை ஜோதிடப் பொதுப்பலன்களும் முதன்மை ஜோதிட சூட்சம பலன்களும் 

( காலபுருஷ லக்னம், ஜெனன பிறப்பு லக்னம், லாபஷ்தானம் மற்றும் அபிவிருத்தி ஸ்தானங்கள், காரகர் குரு, சாரம், லக்னம் மற்றும் 9 ஆம் பாவங்கள் கொடுப்பினை )


பதிவு 2 ஒரு முன்னோட்டம்:

உதாரனம்:
சுக்கிரன் ( கிரகம் ) 5 ( பாவம் அ ராசி கட்டம் ) ஆம் பாவத்தில் இருப்பது.
" சுக்கிரன் லக்னத்திலிருந்து 5 ஆம் பாவத்தில் இருந்தால் "

1 கலைகளில் ஆர்வம் இருக்கும்.

2 கலைகளில் ( சினிமா பாடல் கவிதை etc..) போன்ற கலைகள் முலம் சிரமமின்றி சம்பாதித்தல்.

3 பெண்குழந்தைகள் அதிகம் இருக்கும்.

4 குல தெய்வம் பெண்குழந்தையாக இருக்கும்.

5 கும்ப லக்னமாக இருப்பின் சுக்கிரன் 5 ஆம் பாவமான மிதுனத்தில் இருந்தால் காதல் மற்றும் பாலின வேட்கையால் இரு தாரம் அ பெண்கள் சகவாசம் போன்றவை அடிப்படை ஜோதிடங்களில் பாவங்களில் கிரகங்கள் இருப்பதை வைத்து ஜோதிட பலன்கள் உரைகப்படுகின்றன.

( 5 ஆம் பாவம் " பாலின ஹார்மோன்களை குறிக்கும் " என்பதால் )

5 5 ஆம் பாவத்தில் அ ராசியில் ராகு அ கேது இருந்தால் புத்திரத் தடை அ புத்திர தோஷம். 5 ஆம் பாவ அதிபதி 12 இல் இருந்தால் தடை தோஷம்.

6 குரு ( புத்திரகாரகர் ) 5 இல் இருந்தால் " காரகோ பாவ நாஸ்தி " புத்திர தடை அ தாமதம்.

" இன்னும் எவ்வளவோ 5 ஆம் பாவ காரகதுவங்களை பொதுப்பலன்களை முதன்மைப்படுத்தி நற்பலன்களையும் கெடுபலன்களையும் பலனாக சொல்லபடுகிறது. பதிவின் நீளம் கருதி மேற்சொன்னவைகள் போதுமானது "



பதிவு 2 

சுக்கிரன் லக்னத்திலிருந்து 5 ஆம் பாவத்தில் இருந்தால்:
( அடிப்படை ஜோதிட பொதுப்பலன்கள் )

பதிவு 3 

ஜோதிட சூட்சம பலன்கள் 
( முதன்மை ஜோதிட பலன்கள் )

                   









லாபஷ்தானம் அபிவிருத்தி ஸ்தானம் மற்றும் திரிகோண ஸ்தானங்கள்:
எந்த ஒரு பாவத்துக்கும் அதன் 3 ஆம் பாவமும் ( அபிவிருத்தி ஸ்தானம் ) 11 ஆம் பாவமும் வலு பெற்று இருத்தல் அவசியம் ஆகும். உதாரனமாக 5 ஆம் பாவம் கலைகள் போன்ற காரகதுவங்களை உள்ளடக்கிய பாவம். காதல், கவிதை, சினிமா, பாடல், அரசியல், காமம் ( பாலியல் வேட்கை ) etc....

காதலும் செல்போன் உதவியும், ( 5 காதல் 3 செல்போன் )
கலைகள் என்றால் காதலும் அடக்கம் 5 ஆம் பாவ காரகத்துவங்களில் ஒன்றான காதல் வலுபெற இன்றைய காலத்தில் செல்போன் தகவல் தொடர்பு சாதனம் முக்கியம், அன்றைய காலத்தில் தோழர்கள் அ தோழிகள் முலம்,  அதாவது காதல் வகையில் ஆசைகள் எண்ணங்கள் பூர்த்தி பெற்று மனதிருப்தி பெற தகவல் தொடர்பு சாதனம் மற்றும் மக்கள் தொடர்பு  ( செல்போன் 3 ஆம் பாவ காரகத்துவம் ) முக்கியம் பெறுகிறது. மேலும் 5 ஆம் பாவ காரகத்துவங்களில் ஒன்று அரசியல் என்றால் மக்கள் தொடர்பை கொடுப்பது 3 ஆம் பாவம். அதாவது 5 ஆம் பாவ காரகதுவங்கள் வலுபெற்று இனிதே நடைபெற 3 ஆம் பாவம் வலு பெற்று இருத்தல் அவசியம் ஆகும். அதாவது 5 ஆம் பாவத்தின் லாபஷ்தானமான 11 ஆம் பாவம். லக்னத்திலிருந்து 3 ஆம் பாவம்.

காதலும் காதல் திருமணமும் ( 5 காதல் 7 திருமணம் )
கலைகள் என்றால் காதலும் அடக்கம் 5 ஆம் பாவ காரகத்துவங்களில் ஒன்றான காதல் திருமணம் வகையில் காதல், திருமணமாக பரிணாமம் பெற அதாவது காதல், காதல் திருமணமாக அபிவிருத்தி ஆக திருமணம் காதல் திருமணமாக ( 7 ஆம் பாவம் காரகத்துவம் ) முக்கியத்துவம் பெறுகிறது. 5 ஆம் பாவம் முதல் குழந்தையை குறிக்கும் புத்திர ஸ்தானம் ஆகும் 7 ஆம் பாவம் புத்திரம் வகையில் இரண்டாவது குழந்தையை குறிக்கும் பாவம் ஆகும். அதாவது 5 ஆம் பாவ காரகதுவங்கள் வலுபெற்று இனிதே நடைபெற 7 ஆம் பாவம் வலுபெற்று இருத்தல் அவசியம் ஆகும். அதாவது 5 ஆம் பாவத்தின் அபிவிருத்தி ஸ்தானமான 3 ஆம் பாவம். லக்னத்திலிருந்து 7 ஆம் பாவம்.


3 7 11 திரிகோண பாவங்கலும் 5 ஆம் பாவமும்.
ஒவ்வொரு பாவங்களுக்கும் திரிகோண பாவங்கள் உண்டு. 3 7 11 ஆம் பாவங்கள் 5 ஆம் பாவ காரகதுவங்கள் இனிதே நடந்தேற வலு பெற்றிருப்பது அவசியம் ஆகும்.


சமசப்தம பாவம்:
இங்கு 11 ஆம் பாவம் 5 ஆம் பாவத்தின் சமசப்தம பாவம் ஆகும். அதாவது 5 ஆம் பாவத்திற்கு 7 ஆம் பாவம் ஆகும். ஓட்ரைபடை சமசப்தம பாவங்கள் பன்மடங்கு தன்னை வலுபடுத்தும். ஆகவே 5 ஆம் பாவ காரகதுவங்கள் இனிதே நடந்தேற 11 ஆம் பாவம் வலு பெறுவது அவசியம் ஆகும். அதாவது 5 ஆம் பாவத்துக்கு 7 ஆம் பாவம். லக்னத்திலிருந்து 11 ஆம் பாவம்.



ஜோதிட சூட்சமம்:

3 7 11 பாவங்கள் வலுவும் பொதுப்பலனும்: 
வெறுமனே 5 ஆம் பாவத்தில் ராகு அ கேது இருந்தால் புத்திரதோஷம், புத்திர தடை என பலன் கூறுதல் தவறு. ராகு அ கேது 5 இல் இருப்பது புத்திர தோசமே 10% பலனாக இந்த பொதுப்பலனை கருதலாம் 3 7 11 ஆம் பாவங்கள் வலுவாக இருக்கும் பொழுது. அதாவது திருமணமான ஒரு வருடத்தில் கிட்டும் குழந்தை பாக்கியம் 2 வருடம் கழித்து கிட்டலாம். 5 ஆம் பாவத்தில் ராகு கேது இருப்பதை அதாவது பொதுப்பலனை உருகாய் போல் பலனுக்கு கருதலாம்.


1 5 9  பாவங்கள் வலுவும் பொதுப்பலனும்:
மேற்சொன்ன வகையிலேயே 1 5 9 திரிகோண பாவங்கள் வலு பெறுதல் கணக்கில் கொள்ளுதல் வேண்டும். அதாவது 1 3 5 7 9 11 போன்ற ஒற்றை படை பாவங்கள் வலுபெருதல். இங்கு 1 5 9 ஆம் பாவங்கள் இரண்டாம் வரிசையில் குறிப்பிட காரணம் ஒரு பாவத்தின் திரிகோண பாவங்கள் வலுபெருதல் 100% பலன்கள் ஆகும். அதுவே ஒரு பாவத்தின் 3 அல்லது 11 ஆம் பாவத்தின் திரிகோண பாவங்கள் வலுபெருவது 200% பலன்கள் ஆகும்.

ஜோதிட சூட்சமம்:
3 7 11 பாவங்கள் வலு இழத்தலும் பொதுப்பலனும் 
1 5 9  பாவங்கள் வலு இலத்தலும் பொதுப்பலனும்
3 7 11 / 1 5 9 போன்ற ஒற்றை படை பாவங்கள் வலு குன்றினால், ராகு அ கேது 5 ஆம் பாவத்தில் இருக்கும் பொதுப்பலனையும் பொரியல் அளவில் பலன் கணிக்க எடுத்துக் கொள்ளலாம். 


கர்மா கொடுப்பினை 
12 பாவங்களும் திசா புத்திகளும் 
விதி மதி கொடுபினைகள்.
ஜோதிடத்தில் ஒரு கதவு மூடினால் அதாவது கர்மா பலனால் ( விதி மதி கொடுப்பினை ) 4 ஆம் பாவம் இன்று டெஸ்ட் டுப் பேபி option உள்ளது. காரகர் பொருத்தும், 5 ஆம் பாவாதிபதி சாரம் பொருத்தும், திசா புத்தி பொருத்தும் விதி மதி வழியே மாற்று வழி உள்ளது. அதுவே ஜோதிடம் மற்றும் ஜோதிடரை அணுக காரணம் ஜோதிடரும் விதி மதி வழியே மாற்று வழி ( பரிகாரம் ) உரைக்கும் வானியல் நிபுணர் ஆவார்.


பதிவு 4 
பதிவின் நீளம் கருதி " காலபுருஷ தத்துவ விளக்கம், லக்ன விளக்கம், நட்சத்திர பாத சாரம், 5 ஆம் பாவத்துக்கு லக்னம் மற்றும் 9 ஆம் பாவ கடவுள் அனுக்கிரக கொடுப்பினை " அடுத்தடுத்த பதிவுகளில் காணலாம்.


பாரம்பரியம் + நாடி + கேபி நிபுணன்.
சி,காளிதாஸ்.


ஜோதிட பதிவுகள் தம்மை வந்தடைய follow option click செய்து subscribtion செய்யவும் அ email முறையில் ....பதிவுகளுக்கு கமெண்ட்ஸ் செய்யவும் பதில் தரப்படும்.























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..

.