Ads Here

செவ்வாய், 9 அக்டோபர், 2018

லக்னத்தில் சூரியன் பலமா? பலஹினமா? பொதுப்பலன் நடைமுறை வாழ்க்கையல்ல!

1. லக்னத்தில் அ 1 ஆம் பாவத்தில் சூரியன் இருந்தால் (பொதுப்பலன்)
ஜோதிடருக்கு ஜோதிடர் மாறுபட்ட பலன்கள் தென்படும். அடிப்படையில் லக்னத்தில் சுப கிரகங்கள் இருப்பது நன்மையே. மேலும் லக்னம் ஜாதகரின் மூளை, உடல்வாகு, நோய் எதிர்ப்பு திறன் போன்ற தேக ஆரோக்ய விசயங்களை ( காராகத்துவங்கள் ) தன்னகத்தே கொண்டுள்ள் ஒரு மிகப்பெரிய ஹெட் ஆபீஸ்.

அதாவது லக்னம் மற்ற 11 பாவங்களையும்  தன்னகத்தே கொண்டுள்ள் ஒரு மிகப்பெரிய ஹெட் ஆபீஸ் ஆகும் நண்பர்களே.

2. லக்னாதிபதி & சூரியன் லக்ன பாவத்தின் காரகர் ( காரக கிரகம் )
லக்னத்தில் இருந்த 12 பாவங்கள் உள்ளது. லக்ன பாவாதிபதி ( அதிபதி )  ஜாதகரின் மூளை, உடல்வாகு, நோய் எதிர்ப்பு திறன் போன்ற தேக ஆரோக்யம், ஆளுமை திறன் (லீடர்ஷிப்) சுயகௌரவம், நிர்வாக திறன் போன்ற  விசயங்களை குறிப்பிடும் குறிப்பிட்ட பாவாதிபதி ஆவார். லக்னம் பொருத்து லக்னாதிபதி மாறுபடுவார்.

3. காரக கிரகம் சூரியன் 
ஆனால் ஒவ்வொரு பாவத்திற்கும் பாவ காரகத்திற்கும் குறிப்பிட்ட காரக கிரகங்கள் உண்டு. அவ்வகையில் லக்னபாவத்தின் லக்னம் கொண்டுள்ள விசயங்களுக்கு பொதுவான காரக கிரகம் சூரியன் ஆவார். சூரியன் ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவான லக்ன பாவ காரக கிரகம்.

4. சூரியன் குரு காரக கிரகங்கள் 
லக்ன பாவத்தின் உடல் சார்ந்த அதாவது தேக ஆரோக்கியம் சார்ந்த விசயங்களுக்கு ( காரகத்துவங்கள் ) மட்டுமே சூரியன் காரகர் ஆகிறார்.

5. குரு லக்ன பாவத்தின் காரக கிரகம்
லக்ன பாவம் ஜாதகரின் அன்பவிக்கும் யோகங்களை தெரிவிக்கும். மேலும் செயல்கள் ஆகவே இது போன்ற காரகங்களுக்கு குரு காரகர் ஆகிறார்.

6. சூரியன் உடல் அவயம் சார்ந்த காராகத்துவங்கள் ( குணாதிசயங்கள் )
மூளை, எலும்பு, தண்டுவடம், இருதயம், கண் போன்ற உடலில் உள்ள முக்கிய உறுப்புகளை அதாவது மனித உடல் இயக்கத்திற்கு உண்டான உயிர் காரகங்களை கொண்டவர் சூரியன்.

7. சூரியன் உதயாதி நாழிகையும் உயிர் ஜெனனமும் 
சூரியன் இல்லையேல் உலகம் இல்லை. உயிர்கள் இல்லை. சூரியன் கிரகங்களின் தலைவன்.சூரியன் உதயாதி நாளிகை பொறுத்தே லக்ன உதயம். ஆதாவது ஜாதகர் ஜெனனம் ஆகிறார். சோ, சூரியன் மனிதனின் உயிர் சார்ந்த விசயங்களுக்கு முக்கிய காரக கிரகம் ஆகிறார்.

8 லக்னபாவ கொடுப்பினை ( தேக ஆரோக்கியம் )
பாரம்பரியம் நாடி ஜோதிடம் கடந்து பிறந்த நேரம் துல்லியமாக கணிக்கப்பட்ட கேபி அட்வான்ஸ் ஜோதிடத்தில் லக்னபாவம் தான் நின்ற நட்சத்திரம் உப நட்சத்திரம் மூலம் பாவங்களின் உள்தொடர்பில் 8 12 போன்ற பாவங்களை தொடர்பு கொண்டு விதிகொடுப்பினை கெட்டு இருப்பினும்,

சூரியன் கிரக காரக கொடுப்பினையில் தான் நின்ற நட்சத்திரம் உப நட்சத்திரம் மூலம் 1 3 5 7 9 11 போன்ற ஒற்றைப்படை பாவங்களை தொடர்பு கொண்டால் சமாளிக்கலாம். சூரியன் வலிமை பெறுதல் சுபமே.

9. நாடி கேபி ( பாவங்களின் உள்தொடர்புகள் ) அவசியம் 
ஆனால் பாரம்பரிய கான்செப்ட் சூரியன் லக்ன அசுபர் ஆ ஊ என்ற காரகங்களை தாண்டி அடுத்தடுத்த ஜோதிடங்களை அப்டேட் செய்தல் வேண்டும்.

அடுத்த பதிவில் 
லக்னம் பொருத்தும் / 1 5 9 / 2 சூரியன் சேர்கை பொருத்தும் ( நாடி ) 
நிறைய பேசலாம் நண்பர்களே சூரியன் லக்னத்தில் பலமா? பலஹினமா? என்பதை பற்றி அடிப்படையில் பாரம்பரிய ஜோதிடத்தில் இருந்து அதாவது வேத ஜோதிடத்தில் இருந்து, பிறகு நாடி கேபி என ஒன் பை ஒன் ஆக பார்க்கலாம் நபர்களே.


பாரம்பரியம் + நாடி + கேபி ஜோதிட நிபுணர் 
சி,காளிதாஸ் 
8675246377
kali78das@gmail.com















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..

.