Ads Here

புதன், 17 அக்டோபர், 2018

குரு தரும் ராஜயோகம் - கேந்திராதிபத்திய தோஷம் GURU RAJAYOK DASA PUKTI

அமலா யோகம் / வசுமதி யோகம்
குரு லக்னத்தில் இருந்து வரும் 10 ஆம் பாவத்தில் இருந்தால், அமலாயோகம் என்றும் வசுமதி யோகமென்றும் உரைக்கப்படுகிறது. யோகத்தால் ஏற்படும் சுபபலன்களும் உரைக்கப்படுகிறது.

குரு சந்திர யோகம் 
 குருவும் சந்திரனும் சேர்கை பெற்று இருந்தால் அது குருசந்திர யோகமென்றும், யோகத்தால் ஏற்படும் சுபபலன்களும் உரைக்கப்படுகிறது.

திரிகோணம் மற்றும் கேந்திரம் 
லக்னத்தில் இருந்து எண்ணி வரும் 1 5 9 ஆம் வீடுகள் திரிகோண ஸ்தானங்கள் அதாவது லட்சுமி ஸ்தானம் என்றும், லக்னத்தில் இருந்து எண்ணி வரும் 4 7 10 ஆம் பாவங்கள் கேந்திர ஸ்தானங்கள் அதாவது விஷ்ணு ஸ்தானம் என்றும் அழைகப்படுகிறது.

பாரம்பரிய ஜோதிடத்தின் ஆணிவேர் இந்த கேந்திர ஸ்தானங்களும் திரிகோண ஸ்தானங்களும் ஆகும்.

கேந்திராதிபத்திய தோஷம் 
லக்னத்தில் இருந்து எண்ணி வரும் 4 7 10 ஆம் பாவங்கள் கேந்திர ஸ்தானங்கள் ஆகும். கேந்திர ஸ்தானங்களில் அமரும் சுப கிரகங்கள் கேந்திராதிபத்திய தோஷத்தால் அசுப பலன்களையும், கேந்திர ஸ்தானங்களில் அமரும் சுப கிரகங்கள் கேந்திராதிபத்திய தோஷத்தால் சுப பலன்களையும் தரும்.

சுபர்களும் அசுப பலன் காலமும் 
குரு சுபர் லக்னத்தில் இருந்து எண்ணி வரும் 4 7 10 ஆம் பாவங்களில் அதாவது கேந்திர ஸ்தானங்களில் குரு இருந்தால் ESPECIALLY குரு சுக்கிரன் போன்ற கிரகங்கள் 1௦ ஆம் பாவத்தில் இருந்தால் அமலாயோகம் வசுமதி யோகமென்றும், குருவும் சந்திரனும் சேர்கை பெற்று இருந்தால் குருசந்திர யோகமென்றும் உரைக்கப்படுகிறது.

குருதிசா புத்தி / குரு சாரம் நின்ற கிரக திசா புத்தி 

குரு திசா புத்தி 
அமலாயோகம் வசுமதியோகம் மற்றும் குருசந்திர யோகமெல்லாம் சும்மா, குரு தனது திசா புத்தி காலங்களில் கேந்திராதிபத்திய தோஷத்தால் அசுப பலன்களை செய்வார்.

குரு நட்சத்திரம் ( சாரம் ) நின்ற கிரக திசா புத்தி
அமலாயோகம் வசுமதியோகம் மற்றும் குருசந்திர யோகமெல்லாம் சும்மா, குரு சாரம் பெற்ற கிரகங்களின் திசா புத்தி காலங்களில் குரு பெருமளவு அசுப பலன்களை தருவார்.

காரணம் ஒரு கிரகம் தான் நின்ற நட்சத்திரம் உப நட்சத்திரம் வேலையை முதன்மையாக செய்யும். உப நட்சத்திரம் வரை கூட போகவேண்டாம். சாரம் அளவாவது அவசியம்.


                                     "சாரம் பாரான் சோரம் போவான்"
                                   "வைத்தியன் கையை பார்க்கணும்" 
                                     "ஜோதிடன் காலை பார்க்கணும்" 
                                              ( கிரகம் நின்ற பாதசாரம் )

VEDIC + NADI + KP SPE
S,KALIDAS  

8675246377
KALI78DAS@GMAIL.COM













































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..

.