நண்பருடன் கலந்துரையாடலில்.....
தலைப்பு
பித்ரு தோஷம் / பிதுர் சாபம்
களத்திரதோஷம் & புனர்ப்புதோஷம்
களத்திரதோஷம் மற்றும் புனர்ப்பு தோஷம் பித்ரு தோஷத்தின் வெளிப்பாடு ஆகும். ஒருவர் ஜாதகத்தில் களத்திரம் புனர்பு இருந்தால் பித்ரு தோஷம் தென்படுவதை சரியான முறையில் நாடி ஜோதிட முறையிலும் பாரம்பரிய ஜோதிட முறையிலும் அறியலாம்.
நாடி ஜோதிட முறையில் பித்ரு தோஷம்
சூரியன் தந்தை வழி முன்னோரை குறிக்கும் காரக கிரகம். சந்திரன் தாய் மற்றும் தாய் வழி முன்னோரை குறிக்கும் காரக கிரகம்.
சூரியன் மற்றும் சந்திரனுக்கு 1 5 9 / 2 இல் ராகு அ கேது தொடர்பு
பித்ரு தோஷம் தீவிரம் ( நாடி முறையில் ) அறிதல்
சூரியன் சந்திரன் அமர்ந்த பாகையிலிருந்து 1 5 9 / 2 ல் ராகு அ கேது அமர்ந்த பாகை நெருக்கத்தை வைத்து மேலும் ஆர்ஜி ராவ் நாடி ஜோதிட முறையில் தீவிரம் அறியலாம்.
உதாரணம்
சூரியன் மகரம் 1௦ பாகை ராகு அ கேது மகரம் மேஷம் அ சிம்மம் 5 பாகை அ 7 பாகை என close ஆக இருப்பதை வைத்து தீவிரம் மேலும் அறியலாம் .
பாரம்பரிய ஜோதிட முறையில் பித்ரு தோஷம்
4 ஆம் பாவாதிபதி தாயாரையும் 9 ஆம் பாவாதிபதி தந்தையாரையும் குறிக்கும் பாவாதிபதிகள். மேற்சொன்ன முறையில் பாவாதிபதிகள் அமர்ந்த பாவத்தில் இருந்து 1 5 9 / 2 ஆம் பாவங்களில் ராகு அ கேது தொடர்பு. தீவிரம் பாகை ( டிகிரி ) அடிப்படையில் அறியலாம்.
மறைவு ஸ்தானம்
மேலும் 8 அ 12 போன்ற மறைவு ஸ்தானங்களில் சூரியன் மறைதல், பகை வீடு etc... போன்றவற்றை உருகாய் போல தொட்டு கொள்ளலாம்.
மற்றபடி ராகு கேது அங்க இருப்பது இங்க இருப்பது. அந்த கிரகம் சேர்ந்து அங்க இருப்பது இந்த கிரகம் சேர்ந்து இங்க இருப்பது பித்ரு தோஷம் ஆ ஊ என்பதெல்லாம் சும்மா just passing cloud மட்டுமே.
களத்திரம் & புனர்ப்பு
ஒரு ஜாதகத்தில் பித்ரு தோஷம் என்றால் அங்கு களத்திரம் அ புனர்பு தோஷம் தென்பட வேண்டும். இல்லையென்றால் பித்ரு தோஷம் பற்றி பயம் தேவையற்றது. காரணம் பித்ரு தோஷத்தின் ஏவலாட்கள் களத்திரம் அ புனர்ப்பு.
( களத்திரம் மற்றும் புனர்ப்பு விதிகாரகன் அ கர்மாகாரகன் சனியினால் உண்டாவது )
அடுத்த பதிவில்
ராமேஸ்வரம் ப்ரோசிஜெர் ( without திலா ஹோமம் )
பிள்ளையார்பட்டி
ஸ்ரீரங்கம்
( AFTER 48 DAYS சுதர்ஷனஹோமம் )
பாரம்பரியம் + நாடி + கேபி
சி,காளிதாஸ்
8675246377
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..