Ads Here

சனி, 1 ஜூன், 2019

திருமண பொருத்தம் / பரிகார செவ்வாய் விதிவிலக்கு என திருமணம் செய்யலாமா?

வணக்கம் நண்பர்களே, இந்த பதிவில பார்க போறது பரிகார செவ்வாய் அதாவது கழிக்கிற செவ்வாய் தான் அந்த ஜாதகத்துக்கு இந்த ஜாதகம் பொருத்தலாம், அதாவது ஆண் பெண் இருபாலர் ஜாதகத்தியும் பொருத்தலாம் அதாவது ஜோசியர் சொல்றாரு இல்லையா?

இந்த பரிகார செவ்வாய் அல்லது கழிக்கிற செவ்வாய் விசயத்துல... 

ஜோசியர் அவரளவுக்கு ஜாதகத்தை ஆராய்ந்து சொல்லும் பலனை அப்படியே எடுத்துக்கிட்டு திருமணம் செய்யலாமா? அப்படி செய்தால் திருமண வாழ்க்கை சிறப்பா இருக்குமா? இதை பத்தி தான் சார் இந்த பதிவுல பாக்க போறோம்    

திருமண பொருத்தம்:
திருமண பொருத்தம் / பரிகார செவ்வாய் அல்லது கழிக்கிற செவ்வாய் தான் நிவர்த்தி செவ்வாதான் என்ற ஜோதிட விதி விளக்குகளை காரணம் காட்டி  திருமணம் செய்யலாமா?


உதாரன ஜாதகம்:
இது ஒரு பெண் ஜாதகம். நடப்பு வயது 21. கல்யாணத்துக்கு வரன் பார்த்துகிட்டு இருக்காங்க. வரன் வந்திருக்கு அம்மா கேள்வி மாப்பிளைக்கு செவ்வாய் தோஷம் இல்லை. பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருக்கு. ஜோசியர் பரிகார செவ்வாய் கழிக்குற செவ்வாய் தான் தாராளமா 2 ஜாதகத்தையும் பொருத்தலாம்னு சொன்னாரு, பொருத்தலாமா சார்? பிள்ளையை கொடுக்கலாமா சார் கேள்வி.....

என்னோட ஒரு கருத்து:
ஜாதகத்தை முழுமையா ஆராயாமல் பரிகார செவ்வாதான், கழிக்கிற செவ்வாதான், செவ்வாய் தோஷ நிவர்த்தினு ஏமாந்து போக வேணாம். தேவையற்ற பின் விளைவுகளை சந்திக்க வேண்டாம் என்பது என்னோட கருத்து.

செவ்வாய் தோஷம் என்பது ஒரு ஜாதகத்தில்....
லக்னத்திலிருந்து வரும் 1 2 4 5 7 8 ஆம் வீடுகளிலோ  அல்லது  12 ஆம் வீட்டிலோ ஒரு ஜாதகத்துல செவ்வாய் இருந்தால் அந்த ஜாதகருக்கு செவ்வாய் தோஷம் இருக்கு என்பது அடிப்படை ஜோதிடமான வேத ஜோதிட விதி. 



ஒகே இந்த பெண் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கா?
லக்னம் சிம்மம் / லக்னத்தில் இருந்து வரும் 4 ஆம் வீட்டில செவ்வாய் இருக்கு. செவ்வாய் தனது 4 ஆம் பார்வையால் திருமண பாவமான 7 ஆம் வீட்டை பார்ப்பதால் செவ்வாய் தோஷம் இந்த பெண்ணுக்கு இருக்கு .....

விதிகள் & விதி விலக்குகல்:
அதாவது வேத ஜோதிடம் பலன்கள் அடிப்படை கட்டமைப்பு எப்படினா நிறைய விதிகள் நிறைய rules இருக்கு. rules விதிகள் இருந்த போதும் அந்த விதிகளை உடைக்கும் விதி விலக்குகல் rules breaking நிறைய இருக்கு. அதாவது விதிகள் விதிவிலகுகள் கொண்ட ஒரு கட்டமைப்பு. 

அதாவது பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு பேய் இருக்கு ஆனால். இந்த விதிகள் விதி விலக்குகல் தான் ஜோதிடருக்கு ஜோதிடர் மாறுபட்ட பலனுக்கு ஒரு காரணம்.

இன்னொரு காரணமும் இருக்கு அடிப்படை ஜோதிடத்தோட நிக்கறது. ஒன்றுக்கும் மேற்பட்ட ஜோதிடங்கள் அந்த ஜோதிட விதிகள் அறியாதது, அந்த ஜோதிட விதிகளை எல்லாம் ஆய்வு செய்து ஒரு முழுமையான முடிவுக்கு வராதது இன்னொரு பெரிய காரணம் அப்படின்னு சொல்லலாம்.....

ஓகே கான்செப்ட் வருவோம்...

வேத ஜோதிட விதி:
செவ்வாய் தோஷம் இருப்பது.

விதி விலக்கு:
செவ்வாய் தோஷத்திற்கு மட்டும் 16 வகையில் விதி விலக்குகல்  அடிப்படை வேத ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது.  
இந்த பெண் ஜாதகத்துல 2 விதி விளக்குகளை சாதாரணமா பார்க்கலாம்:

1.. சிம்ம லக்னத்திற்கு செவ்வாய் யோகாதிபதி என்பதால் நன்மையே செவ்வாய் செய்வார் என்ற குற்று....

( செவ்வாய் 4 மற்றும் 9 ஆம் வீட்டுக்கு உடையவன். மொத்தம் 12 லக்னம். எல்லா லக்னத்துக்கும் யோகாதிபதி உண்டு. கேந்திர ஷ்தானதுக்கும் திரிகோண ஷதானத்துக்கும் எந்த கிரகம் வருதோ அந்த கிரகம் அந்த லக்னத்துக்கு லக்னாதிபதிக்கு அதாவது ஜாதகருக்கு யோகம் தரும் யோகாதிபதி ஆவார். இங்க செவ்வாய் யோகாதிபதி 4 கேந்திரம் 9 திரிகோணம் 2 வீட்டுக்கும் ஒரே கிரகம் ஒரே அதிபதி செவ்வாய் )  

2 .. குரு பார்வை செவ்வாய் பெறுவதால் செவ்வாய் தோஷம் நிவர்த்தி அல்லது கெடுபலன் குறைவு...

ஆக ..

16 வகை செவ்வாய் தோஷ விதி விலக்குகளில் 2 விதி விலக்கு இந்த பெண் ஜாதகத்துல இருக்கறதால செவ்வாய் தோஷமில்லை செவ்வாய் தோஷ நிவர்த்தி, கழிக்கிற செவ்வா தோஷம் தான் அப்படின்னு செவ்வாய் தோஷம் சம்பந்தமான ஜாதக ஆய்வில் பலன் வரும் ஜோதிடருக்கிட்ட இருந்து. இன்னும் ஜோசியர  பொருத்து பரிகார செவ்வாய் பரிகாரம் காசு பணம் துட்டுன்னு அது ஒரு ட்ராக் ல ஓடும். அது ஒரு தனி கான்செப்ட்டு .....

குறிப்பு:
செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதன் பாதிப்புகள். ஆணுக்கும் பெண்ணுக்கும் செவ்வாய் தோஷம் பாதிப்புகள் தரும் வயது வரைமுறை. செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரம் உண்டா?  இது சம்பந்தமாக பதிவுகள் ஏற்கனவே உள்ளது. தேவைபடுவோர் திருமண கர்மா play list இல் காணலாம்......



கேள்வி:
இந்த ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கு. ஆனால் விதி விலக்குகல் அதாவது  பரிகார செவ்வாய் கழிக்கிற செவ்வாதான் என்ற பெயரில் ஆண் பெண் இரு ஜாதகங்களை பொருத்தலாமா? வேத ஜோதிட விதிகள் விதி விலக்குகல் வகையில் ஆய்வு செய்த ஜோதிடர் பலன்களை அக்செப்ட் செய்து திருமணம் செய்யலாமா? திருமணம் செய்தால் தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக இருக்குமா?

லக்னம் சிம்மம் / செவ்வாய் 4 ஆம் வீட்டில் / செவ்வாய் திருமண பாவத்தை பார்ப்பதால் செவ்வாய் தோஷம் இருக்கு / செவ்வாய் யோகாதிபதி குரு பார்வை விதி விலக்கு no problem சொல்லுது / செவ்வாய் கு 5 ல் ராகு 9 இல் சனி 11 ல் கேது.

அதாவது ஆய்வுக்கு உண்டான கிரகங்கள் மட்டும் இங்க மென்சன் பண்ணிருக்கேன்.... 

அடுத்த பதிவில் தொடரலாம்...

ஓகே நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சுருந்தா நம்ம blog ஐ subscribe செய்ங்க like செய்ங்க share செய்ங்க. நம்ப blog update செய்யும் பதிவுகள் உங்களுக்கு உடனுக்கு உடனே வந்து சேரும். இந்த பதிவு சம்பந்தமா ஏதேனும் doubt இருந்தா கமென்ட் பண்ணுங்க. நான் reply பண்ணறேன்.

நன்றி வணக்கம்.....

பாரம்பரியம் + நாடி + கேபி 
சி,காளிதாஸ்.....
8675246377....








































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..

.