Ads Here

திங்கள், 5 அக்டோபர், 2020

ராகு கேது பெயர்ச்சி 2020: ஜாதக கோள்களின் கோலாட்டமும்

ராகு கேது பெயர்ச்சி 2௦2௦

 

வணக்கம், வருகிற செப்டம்பர்  2௦2௦ ல் ராகு கேது பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்க படி  மாத தொடக்கத்திலும் இதற்கு நேர்மாறாக, திருகணித முறையில் ராகு கேது பெயர்ச்சி 2௦2௦ செப்டம்பர் 23 ஆம் தேதி அன்று நிகழ உள்ளது...

 

அதை தொடர்ந்து, ராகு ரிஷிபத்திலும் கேது விருச்சிகத்திலும் – அடுத்த 1.5 ஆண்டு காலம் சஞ்சாரம் செய்ய உள்ளனர். இதன் விளைவாக, 12 ராசி அன்பர்களின் வாழ்கையில் ஏற்படும் மாற்றங்களையும் கூடுதல் சிறப்பாக, பிறப்பு ஜாதகத்தில் சந்திரன் (ராசி) முதல் முக்கியத்துவம் வாய்ந்த, ஏனைய 8 கிரகங்களும் (மேஷம் முதல் மீனம் வரை) அமர்ந்துள்ள  ராசிகள் அடிப்படையிலும் நிச்சயமாக, ராகு கேது பெயர்ச்சியில் கிரகங்கள் தரும் நன்மை தீமை பலன்கள் வரை துல்லியமாக அறியலாம்...



rahu ketu transit 2020 in tamil
ராகு கேது பெயர்ச்சி 2020


முக்கியத்துவம் வாய்ந்த குரு சனி பெயர்ச்சி:-

 

சம முக்கியத்துவம் வாய்ந்த, குரு சனி பெயர்ச்சி மனித வாழ்வில் நிகழும் மாற்றங்களை குறிப்பிடும். காரணம், குரு சனி ஆட்சி வீடுகளான தனுசு மகரம் கும்பம் மீனம் நான்கும்  முக்கியத்துவம் வாய்ந்த, மனிதனின் உடல் பாகங்களில் தொடை முதல் பாதம் வரையிலான கால் பகுதிகளை குறிப்பிடும்........

 

இதன் காரணமாக, குரு சனி ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவது மனிதனின் அகவாழ்விலும் புற வாழ்விலும் நிச்சயமாக, மாற்றங்களை தருவதாக கருதப்படுகிறது...

 

முக்கியமாக, சனி விதி காரகன் ( விதி அமைப்பின் கொடுப்பினை அ வாங்கி வந்த வரம்) என்றால் மாறாக, குரு மனிதனின் சுய முயற்சியை குறிப்பவர் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்....


சமமான முக்கியத்துவம் வாய்ந்த ராகு கேது பெயர்ச்சி 2020:-

 

இதற்கு நேர்மாறாக, ராகு கேது ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவது முரண்பாடான, மாற்றங்களை மனிதனின் அகம் புறம் வாழ்கையில் ஏற்படுத்துவதாக கருதப்படுகிறது....

 

காரணம், ஜோதிட சாஸ்திரத்தில் குரு சனி விதியை  இயக்கும் கிரகங்களாகவும் மறுபுறம், ராகு கேது விதியை முடக்கும் கிரகங்களாகவும் கூறப்படுகிறது....

 

உதாரணமாக, கைரேகை சாஸ்திரத்தில் விதியை இயக்கும் சூரியன் புதன் சுக்கிரன் சனி மற்றும் குரு கிரகங்களுக்கு மட்டுமே விரல்கள். மாறாக, விதியை முடக்கும் ராகு கேது சந்திரன் செவ்வாய்க்கு மேடுகள் மட்டுமே...

 

அதே சமயத்தில், ராகு கேது இரண்டும் கொடிய விஷமுடைய பாம்புகளே மாறாக, ராகு தரும் பலன்களில் கேதுவை போலல்லாமல், புற வாழ்கையில் (OFFICIAL LIFE) யோகங்களை தர வல்லவர்....

 

ஆனால், கேது மனிதனின் அகவாழ்விலும் சரி புற வாழ்விலும் சரி கெடு பலன்களை மட்டுமே தர வல்லவர். இருந்தாலும், கேது ஞானக்காரகன் ஞானம் தருபவரே உண்மையில், புதன் தரும் ஞானம் தெளிவு விவேகம் புத்தி கூர்மைக்கும், கேது தரும் ஞானம் தெளிவுக்கும் வித்தியாசம் உள்ளது.

 

எல்லாவற்றிற்கும் மேலான, பேரின்ப ஞானம், பக்தி, ஆன்மிகம், தெளிவு, தத்துவம் - சாமியார் மற்றும் சன்யாசிகளுக்கு மட்டுமே பொருந்தும். உண்மையில், கேது தரும் யோகம் லங்கோடி யோகம் (கோவணம்)...

 

உதாரணமாக, கேது இருக்கும் வீடு அந்த வீடு குறிக்கும் காரகங்கள் பலம் இழக்கும். கூடுதலாக, கேது அமர்ந்த வீட்டில் கேதுவுடன் சேர்கை பெற்று இருக்கும் கிரகத்தின் காரகதுவமும் பலம் இழக்கும்....

 

இதை தொடர்ந்து...


பிருகு நந்தி நாடியில் (ராகு கேது பெயர்ச்சி பலன்கள்) 

 

ராகு அ கேது அமர்ந்த வீட்டிலிருந்து (பின்புறமாக ANTICLOCKWISE) எண்ணி வரும் 5 9 ஆம் வீட்டில் இருக்கும் கிரகங்களும் மேலும், ராகு கேதுவுடன் சேர்கை பெற்றே இயங்கும். இன்னும், சேர்கை பெற்றே பலன்களையும் தரும் எனலாம் ...

 

காரணம், எந்த ஒரு கிரகமும் அமர்ந்த ராசியிலிருந்து என்ன வரும் 1 5 9 முன்று வீடுகளும் ஒரே திசையை குறிக்கும். மேலும் சிறப்பு, ஒரே பஞ்சபூத தத்துவத்தை குறிக்கும்...

 

அதாவது, கிழக்கு தெற்கு மேற்கு வடக்கு என்ற 4 திசைகளையும், மற்றும் நெருப்பு நிலம் காற்று நீர் என்ற 4 பஞ்ச பூதங்களையும் குறிக்கும்....

 

இதன் விளைவாக, 1 5 9 திரிகோண ராசிகள் குறிப்பிடும் வீடுகளில் உள்ள கிரகங்களும் ராகு கேதுவ்டன் சேர்கை பெரும். அதன் விளைவாக,  ராகு மற்றும் கேதுவுடன் சேர்கை பெரும் கிரகங்கள் தனது காரகங்களை இழந்து விடும்...

 

முரண்பாடாக, ராகு கேது சாயா கிரகங்கள் குறிப்பிடும் காரகங்கள் வழியே தனது காரகங்களை வெளிப்படுத்தும்...

 

கிரக காரகங்கள்: குணங்கள், தொழில்கள், கல்விகள், உறவு முறைகள் மேலும், உடல் உறுப்புகள், நோய்கள் முதலியன...

 

எனவே...

 

12 ராசி மற்றும் 12 லக்னம் சார்ந்த அன்பர்கள் ராகு கேது பெயர்ச்சி 2௦2௦ ல் உண்மையில், அக வாழ்கையிலும் புற வாழ்கையிலும் ஏற்படும் மாற்றங்களையும் அறிக...


அவற்றுக்கெல்லாம், உங்கள் பிறப்பு ஜாதகம் மற்றும் 9 கிரகங்களும் அமர்ந்துள்ள ராசி மற்றும் பாகை முக்கியம் கூடுதல் பலனுக்கு, ஜாதகம் எடுங்க...


கூடுதல் சிறப்பாக, 6௦ கோடி மக்களுக்கும் பொதுவான ஒரு ராசி பலனை தாண்டி மேலும், நிலையற்ற ராசி பலனை தாண்டி ஜெனன கால ஜாதக ரீதியாக உண்மையான, ராகு கேது பெயர்ச்சி 2020 நடைமுறை வாழ்க்கை பலன்களை தெளிவாக அறியலாம்...


(Click Me For More Information)


Final Part Link Coming Soon:- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..

.