Ads Here

புதன், 3 ஏப்ரல், 2019

சூரியன் காரகங்கள் / சூரியன் காரகத்துவங்கள் / Karakatwas Of Sun


அறிமுகம்:

NOTE:
சூரியன் கிரகம் குறித்த விபரங்கள் அறியும் முன் இந்த பதிவு இனி அடுத்து வரும் பதிவுகளில் பயன்படுத்தும் ஜோதிட வார்த்தைகளை அறிதல் அறிந்து பயிலுதல் நலம் தரும்.

கிரக காராகத்துவங்கள் என்றால் என்ன?

சூரியன் காரகத்துவங்கள்
சூரியன் காரகத்துவம்
சூரியன் காரகங்கள்

1 பொதுகுணங்கள்:
நவகிரகங்களில் 9 கிரகங்களும் தன்னகத்தே குறிப்பிட்ட பொது குணங்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு கிரகங்களுக்கும் ஏராளமான பொது குணங்கள் உண்டு.

2 உறவுமுறைகள்:
தந்தை மகன் சித்தப்பா பெரியப்பா மாமன் அத்தை மனைவி மகள் என மனித வாழ்கையில் உறவுமுறைகள் பல உண்டு.

நவகிரகங்களில் ஒவ்வொரு கிரகமும் ஒரு சில குறிப்பிட்ட உறவுமுறைகளை குறிக்கும். ஒவ்வொரு கிரகங்களும் தன்னகத்தே உறவுமுறைகளை கொண்டுள்ளது.

3 தொழில்கள்:
அன்றைய காலகட்டத்தில் தொழில்கள் மிகவும் குறைவு. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் 5 தொழில்களை மட்டுமே சொல்ல முடியும். இன்று கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு பல தொழில்கள் உண்டு.

நவகிரகங்களில் ஒவ்வொரு கிரகமும் ஒரு சில குறிப்பிட்ட தொழில்களை குறிக்கும். ஒவ்வொரு கிரகங்களும் தன்னகத்தே தொழில்களை கொண்டுள்ளது.

4 உடல் அவயங்கள் ( கிரக உறுப்புக்கள )
மனித உடலில் பல வகையான உறுப்புக்கள் உள்ளது.

நவகிரகங்களில் ஒவ்வொரு கிரகமும் ஒரு சில குறிப்பிட்ட உடல் உறுப்புகளை குறிக்கும். ஒவ்வொரு கிரகமும் தன்னகத்தே உடல் உறுப்புகளை குறிக்கும் அம்சங்களை கொண்டுள்ளது.

5 கல்வி:
இன்றைய கால கட்டத்தில் பல வகையான கல்வி முறைகள் உள்ளது. புதிது புதிதாக வந்த வண்ணமே உள்ளது.

நவகிரகங்களில் ஒவ்வொரு கிரகமும் ஒரு சில குறிப்பிட்ட கல்வி முறைகளை குறிக்கும் அமசங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

6 நோய்கள்:
மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள் பல வகை உண்டு. காய்ச்சல் சளி ஆஷ்துமா அல்சர் வாயு தொல்லை ஹீமோ க்லோபின் குறை அதாவது ரத்தம் சம்பந்தமான பிரச்சனை கல்சியம் DEFICENCY முடிகொட்டுதல் சக்கரை பிரஷர் கொழுப்பு கண்நோய் கால்சியம் DEFICENCY CANCER புற்றுநோய் உயிரணு குறைபாடு அடுகிட்டே போலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் மனித வாழ்கையில் ஏற்படும்  நோய் நொடிகளில் தன்னகத்தே கொண்டுள்ளது. குறிப்பிட்ட கிரகங்களின் பலம் குன்றுதல் அதன் காலம் தென்படுதல் அதாவது ஒவ்வொரு கிரகமும் ஒரு சில குறிப்பிட்ட நோய் நொடிகளுக்கு காரணமாக இருக்கிறது.


7 அதிதேவதைகள்:
தெய்வங்கள் பல வகை காவல் தெய்வங்கள், படைப்பு கடவுள், காக்கும் கடவுள், அளிக்கும் கடவுள், பெண் தெய்வங்கள் என ஏராளம்.

நவகிரகங்களில் ஒவ்வொரு கிரகமும் ஒரு சில குறிப்பிட்ட அதிதேவதைகளை கொண்டுள்ளது.

7 மற்றவை:
இன்னும் தானியம், திசைகள், நிறங்கள், கோவில்கள், நோய் நொடிகள் என ஏராளம் உண்டு. மேலே குறிப்பிட்ட விசயங்கள் முதன்மையானவை.

ஜோதிட வார்த்தை:
சோ, ஜோதிட உலகம் மற்றும் ஜோதிடர்கள் மேலே குறிப்பிட்ட கிரகங்கள் தன்னகத்தே கொண்டுள்ள விசயங்களை கிரக காரகத்துவங்கள் என்றும், கிரக காரகத்துவம் என்றும், கிரக காரகங்கள் என்றும் பெயரிட்டு அழைக்கிறது.




























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..

.