வேத ஜோதிட பொதுப்பலன்கள்
ஜோதிட சுட்சமப் பலன்கள்
உப தலைப்பு
3 ஆம் பாவத்தில் கேது மனோபலம் குறைவு.
அடிப்படை வேத ஜோதிடப் பொதுப்பலன்கள்
பாரம்பரியம் அ பராசாரர் ஜோதிடம் எனப்படும் வேத ஜோதிடத்தில் ஜெனன கால பிறப்பு ஜாதகத்தில் கேது 3 ஆம் பாவத்தில் அமர்ந்து இருப்பது மனோபலம் குறைவு என்ற பலன் பொதுப்பலன் அ அடிப்படைப் பலனாகும். மனோபலம் காரகத்துவம் லக்னத்திலிருந்து வரும் 3 ஆம் பாவ காரகத்துவங்களில் ஒன்றாகும்.
அடிப்படை ஜோதிட பலன்களின் ( பொதுப்பலன்கள் ) பரிணாமங்கள்
பாரம்பரியம் அ பராசாரர் ஜோதிடம் என்றளைகப்படும் வேத ஜோதிடம் பல வகையில் பரிணாமங்களை கண்டது. பிருகு பராசாரர் போன்றோரால் " பிருகு சம்ஹிதை " போன்ற ஜோதிட அடிப்படை மூலநூல்களும், மேலும் வானியல் மாற்றங்களை ஆராய்ந்து வானியல் உண்மைகளை மேலும் உணர்ந்த வராஹமித்திரர் அவர்களின் " வராஹி பிருகத் சம்ஹிதை " போன்ற மூல நூல்களும் உதாரணமாகும்.
பாவங்களின் வேலையாட்கள் கிரகங்கள் ஆகும்
கிரகங்களின் வேலையாட்கள் பாவங்கள் ( 12 கட்டங்கள் அ ராசிகள் ) அல்ல.
3 ஆம் பாவ காரகதுவங்கள்
உடல் அவயங்கள்
உடல் குறில் 3 ஆம் பாவம் காது, தோள்பட்டை, கைகள், கலுதெளும்பு, கழுத்துக்கு கீழ் செல்லும் நரம்பு மண்டலங்கள், ரத்த நாளங்கள், உணர்வு புலன்கள் போன்ற காரகங்களை குறிக்கும்.
குணாதிசயங்கள்
தினவெடுத்த தோள்களும், கைகளுமே, வீரம், தைரியம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் மனோபலம் போன்ற மனித குணாதிசயங்களுக்கு காரணம் ஆகவே 3 ஆம் பாவ காரகதுவங்கள் ஆகும். காரக கிரகம் செவ்வாய்.
2 ஆம் பாவ காரகதுவங்கள் பேச்சு என்றால் 3 ஆம் பாவம் எழுத்தை குறிக்கும் பாவமாகும். எனவே எல்லா வித தகவல் தொடர்புகளையும், தகவல் பரிமாற்றங்களையும் குறிப்பவை 3 ஆம் பாவ காரகதுவங்கள் ஆகும்.
விற்பனை இடமாற்றம் ஒப்பந்தங்கள்
4 ஆம் பாவம் வண்டி வாகனம் வீடு நிலம் போன்ற சொத்துக்களையும், உள்ளூர் வசித்தளையும் குறிக்கும். 3 ஆம் பாவம் நான்காம் பாவத்திற்கு 12 ஆம் பாவமாக வருவதனால் சொத்து விற்பனை ஒப்பந்தங்கள் பண்டமாற்று முறைகளை மற்றும் இடமாற்றங்களையும், அண்டைமாநிலம், அண்டைநாடு போன்றவைகளை 3 ஆம் பாவம் குறிக்கும்.
உறவுமுறை
3 ஆம் பாவம் ஜாதகரின் முதல் இளைய சகோதரம் ( ஆண் ) சகோதரி ( பெண் ) மற்றும் தந்தை 9 ஆம் பாவம் 9 க்கு 3 ( 11 ஆம் பாவம் இளைய சகோதரம் அ சகோதரி உறவு முறையை குறிக்கும் பாவம் ) 11 ஆம் பாவத்துக்கு 5 ஆம் பாவம் ( புத்திரபாவம் அ புத்திரன்கள் குரு புத்திரகாரக கிரகம் ஆகும் )
ஆகவே 3 ஆம் பாவம் தந்தையின் இளைய சகோதர சகோதரிகளின் வாரிசுகளைக் குறிக்கும் பாவம் 3 ஆம் ஆகும்.
மனம் மனோதிடம் / புத்தி பேதலிதல் மனக்குழப்பம்
ஆரம்பகல்வி +2 வரை பயிலுவதற்கு தேவை மனம் ( 4 ஆம் பாவம் ) மனோதிடம் தருவதும் ( சாதக பலன் ) அ புத்தி பேதலிதல் மனக்குழப்பம் ( பாதகபாலன் ) தருவதும் 3 ஆம் பாவத்தின் கொடுபினையை பொருத்து அமையும் ( காரணம் 4 ஆம் பாவத்தின் 12 ஆம் பாவம் 3 ஆம் பாவம் ஆகும் ) மனம் மனோதிடம் மற்றும் புத்தி பேதலிதல் மனக்குழப்பம் போன்றவை 3 ஆம் பாவ காரகதுவங்கள் ஆகும்.
வேத ஜோதிடத்தில் பரிணாம வளர்ச்சி
வேத ஜோதிடத்தில் சூட்சம பலன்கள்
வேத ஜோதிடம் பொதுப்பலன்கள் அடிப்படை ஜோதிடம் முதன்மை ஜோதிடம் என்றும் ஜோதிட சூட்சமம் என்றும் பரிணாம வளர்சிகளை கண்டுள்ளது.
" சாரம் பாரான் சோரம் போவான் "
சுட்சமப் பலன்கள் காணும் முறை
ஜாதகர் அ ஜாதகியின் மனோதிடம் அ மனோபலம் போன்ற குணாதிசயங்களை துல்லியமாக அறிய 3 ஆம் பாவத்தை ( கொடுபினையை ) ஆராய்தல் வேண்டும். வேத ஜோதிடத்தில் 3 ஆம் பாவாதிபதி அமர்ந்த பாவம் ( 8 12 மறைவு ஸ்தானங்கள் ) 3 ஆம் பாவாதிபதி சேர்கைப் பெரும் கிரகங்கள் மற்றும் பார்வை பெரும் கிரகங்கள், அமர்ந்த பகை நட்பு சமம் வீடுகள்.
3 ஆம் பாவாதிபதி ராகு சேர்கை பெறுதல் சிறப்பான பலன்களை தரும். சும்மா கேது 3 ஆம் பாவத்தில் அந்த பலன் இந்த பலன் என்பதெல்லாம் ஜாதக அமைப்பு அல்ல. டைமிங் கொடுப்பினை அதாவது கேது திசா புத்தி அல்லது கேது சாரம் பெரும் கிரகத்தின் காலத்தில் குறைபாடு தென்படலாம் but டைமிங் process மட்டுமே நாட் permanent.
3 ஆம் பாவாதிபதி நின்ற சாரம் ( நட்சத்திர அதிபதி ) லக்னத்துக்கு நன்மை தரும் ஆதிபத்யங்களின் பாவாதிபதிகளின் நட்சத்திரம் பெறுதல் மற்றும் நட்சதிராதிபதி லக்னத்துக்கு நன்மை தரும் சுப வீடுகளில் அமர்வு (சாதகப்பலன்)
3 ஆம் பாவாதிபதி நின்ற சாரம் லக்னத்துக்கு கெடுபலன் தரும் ஆதிபத்யங்களின் பாவாதிபதிகளின் நட்சத்திர சாரம் பெறுதல் ( 8 அ 12 ஆம் அதிபதிகளின் நட்சத்திர சாரம் ) பாதகாதிபதி சாரம் பெறுதல், மாரகாதிபதி சாரம் பெறுதல் போன்றவை 3 ஆம் பாவ காரகதுவங்களுக்கு பாதக பலனைத் தரும்.
வேத ஜோதிடத்தின் பரிணாமம்
கிருஷ்ணமூர்த்தி பத்ததி ( உப சாரம் ) மற்றும் கேபி அட்வான்ஸ் மற்றும் பாவங்களின் விரிவான உள்தொடர்புகள் மூலம் 3 ஆம் காரகதுவங்களின் பலன்களை மேலும் துல்லியமாக அறியலாம். கேபி பதிவுகளில்
பாரம்பரியம் + நாடி + கேபி நிபுனன்
சி,காளிதாஸ்.
பதிவுகள் தம்மை வந்தடைய follow option அ email முறையில் subscription செய்யவும். கமெண்ட்ஸ் செய்யவும் ஜோதிட வகுப்பு பாடங்கள் மற்றும் பதிவுகளுக்கு ஜோதிட சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..