நண்பருடன் கலந்துரையாடலில்.....
விபரீத ராஜயோகம்
வேத ஜோதிடத்தில் 6 8 12 ஆம் பாவங்கள் துர்ஷ்தானம் அ மறைவு ஸ்தானம் எனப்படுகிறது. மறைவு ஷ்தானாதிபதிகள் ( 6 8 12 ) தமது வீடுகளை மாறி அமர்ந்தால் அ அமர்ந்திருப்பது விபரீத ராஜயோகம் எனப்படுகிறது.
விபரீத ராஜயோகம் vs ராஜயோகம்
விபரீதத்தால் கிட்டும் ராஜயோகம் என்பதே சரி. பொதுவாக ராஜயோகம் என்ற வார்த்தை மட்டுமே மக்கள் காதுகளில் ஒலிக்கிறது. காரணம் மக்கள் அல்ல. வெளிப்படும் ஒலிகள் அவ்வாறு.
8 ஆம் பாவகாரகங்கள்
8 என்பது nag வகையில் வலி வேதனை எதிர்மாறான சிந்தனை செயல்கள் etc....
8 என்பது pos வகையில் அடுத்தவர் இழப்பு அதாவது காப்பிட்டு தொகை ஷேர் மற்றும் இட்டு வைப்புகள் மூலம் திடீர் அதிர்ஷ்டம் etc...
12 ஆம் பாவகாரகங்கள்
12 என்பது nag வகையில் விரயம், கெளரவக்குறைச்சல், குடும்பம் விட்டு பிரிதல், சிறைபடல் etc...
12 என்பது pos வகையில் அடுத்த கட்ட தொழில் ( அதாவது ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் ) ஷேர், இட்டுவைப்பு, உறக்கம் etc....
6 ஆம் பாவகாரகங்கள்
6 ஆம் பாவம் இரட்டை வேடதாரி ஆகும். அகம் சார்ந்த விசயங்களுக்கு ஆகாதது. புறம் சார்ந்த விசயங்களுக்கு 6 ஆம் பாவம் மிக முக்கியம்
இங்கு விபரீத ராஜயோகம் என்பது money motive அதாவது வேலை, தொழில் மற்றும் பணம் வகையில் யோகம் அ அதிர்ஷ்டம் குறிக்கும்.
ஆக 6 புறம் சார்ந்த விசயமே டாபிக் உரியது.
6 ஆம் பாவம் pos வகையில் கடன் படுத்தல், போட்டி போட்டு வெற்றி பெறுதல் ( இங்கு தொழில் வகையில் போட்டி போடுதல், TNPSC TRB TET BANK போட்டி தேர்வுகள் ) அதாவது அடுத்தவரை வீழ்த்தி வெற்றி பெறுதல் என்பதாகும்.
குறிப்பு:
இன்று 6 ஆம் பாவம் சிறப்பாக இல்லாதவர்களுக்கு அரசுத்துறை கிடையாது. 1௦ தொழில் மூலம் கிட்டும் அந்தஸ்து, பதவி உயர்வு etc....
எந்த ஒரு பாவத்தையும் அதன் திரிகோண பாவங்கள் வலுபடுத்தும். படத்தின் திரிகோணம் 2 6. மேலும் எந்த ஒரு பாவத்திற்கும் அதன் 9 ஆம் பாவம் அந்த பாவத்திற்கு அதிர்ஷ்டத்தை தரும். 1௦ ஆம் பாவத்தின் 9 ஆம் பாவம் 6 ஆம் பாவம்.
6 ஆம் பாவம் மறைவு ஸ்தானம் என்று அகம் சார்ந்த ( நோய் நொடி ) விசயத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு பலன் உரைத்தல் குருட்டுத்தனம்
பகுதி 2
பதிவின் நீளம் கருதி விபரீத ராஜயோகம் சிறப்பல்ல, அது விபரீதத்தால் விளையும் யோகம் என்பதை தொடரலாம்.
VEDIC / NADI / KP SPE
S,KALIDAS
8675246377
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..