Ads Here

வியாழன், 15 மார்ச், 2018

பித்ரு தோஷம் பித்ரு சாபம் நீங்க பரிகாரம் வழிபாடு ராமேஸ்வரம் சிறப்பு

பித்ரு தோஷம் / பித்ரு சாபம்
பொதுவாக பிறந்த கால ஜெனன கால ஜாதகத்தில் நான்காம் பாவாதிபதி மற்றும் ஒன்பதாம் பாவாதிபதி 8 12 போன்ற துர்ஷ்தானங்களில் மறைவது பித்ரு தோஷம் அ சாபம் ஆகும்.

மேலும் நான்கு மற்றும் ஒன்பதாம் பாவாதிபதிகள் ராகு கேது சேர்கை பெறுதல் பித்ரு தோஷம் அ பித்ரு சாபம் ஆகும்.

மேலும் பிருகு நந்தி நாடி ஜோதிடம் சப்தரிஷி நாடி ஜோதிடம் ஆர்ஜி ராவ் நாடி ஜோதிடம் வகையில் சூரியன் சந்திரன் ராகு கேது சேர்கை பெறுவது ( சூரியன் அ சந்திரன் அமர்ந்த ராசியில் இருந்து ராகு அ கேது 2 / 1 5 9 ஆம் பாவங்களில் அ ராசிகளில் இருந்தால் நாடி ஜோதிட விதிகளின் படி ( nadi golden rules nadi principals ) கிரக சேர்கை ஆகும். இதுவும் ஒரு வகையில் பித்ரு தோசம் ஆகும்.

சூரியன் ( தந்தையை குறிக்கும் காரக கிரகம் )
சந்திரன் ( தாயை குறிக்கும் காரக கிரகம் )

பித்ரு தோஷம் அ பித்ரு சாபம் நீங்க பரிகாரம்
அமாவாசை அன்று ராமேஸ்வரம் சென்று கடலில் திலாஹோமம் செய்து பித்ருகாரகர் மற்றும் ஆத்ம காரகரான சூரியனை வழிபட வேண்டும்.

பித்ரு தோஷ பரிகார முறை விரிவாக அடுத்தடுத்த பதிவுகளில் காணலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..

.