Ads Here

புதன், 11 ஜூலை, 2018

3 ல் ராகு 9 ல் கேது / 3 6 11 ல் அமர்ந்த ராகு கேது நன்மையா?

3 ல் ராகு 
3 ல் இருக்கும் ராகு தைரியம் விடாமுயற்சி சிறப்பான தொடர்பு போன்றவைகளை தருவார். மேலும் பொதுவாக ராகு கேது 3 6 11 போன்ற உப ஜெய ஸ்தானங்களில் இருப்பது நன்மை தரும் என்ற ஒரு பொதுப்பலன் உண்டு.

3 ல் ராகு இருந்தால் கண்டிப்பாக உண்டு. மேலும் 3 ஆம் பாவாதிபதி ராகு சேர்கை பெறுவது மேலும் மேற்சொன்ன விசயங்களில் நன்மையை தரும். ஆனால் ராகு ஒரு மலட்டு கிரகம் விரியம் குறைத்து விடுவார்.

3 ல் கேது 
3 6 11 ல் இருக்கும் கேது பகவான் நன்மையை செய்வார் என்ற ஒரு பொதுப்பலன் உள்ளது. அது தவறு பெரும்பாலும் கேது தான் அமர்ந்த பாவ காரகதுவங்களை பலம் இழக்கவே செய்வார்.

மேலும் கேது சேர்கை பெரும் கிரகங்கள் தங்களது கிரக காரகதுவங்களையும் தங்கள் ஆதிபத்திய காரகதுவங்களையும் வலுவிழக்கின்றன என்பதே உண்மை.

ராகு
அகம் சார்ந்த விசயங்களுக்கு ஆகாதவர் ஆனால் புறம் சார்ந்த விசயங்களை அள்ளி தரும் யோகவான் ராகு பகவான் ஆவார். ஆனால் ராகு காரகத்துவப்படி அகம் சார்ந்த வாழ்க்கையையும் புறம் சார்ந்த வாழ்க்கையையும் அமைத்து கொள்ள வேண்டும்.

கேது 
அகம் சார்ந்த விசயங்களுக்கும் ஆகாதவர் புறம் சார்ந்த விசயங்களுக்கும் ஆகாதவர் கேது பகவான் ஆகும்.

கிரகங்களில் குரு சனி positive planets
ராகு கேது negative planets

ராகு புறம் சார்ந்த விசயங்களை தரும் யோகவான். ஆனால் கேது அகம் புறம் இரண்டும் கிடையாது.

9 ல் கேது 
ஆன்மீக உணர்வு எண்ணம் மற்றும் ஆன்மீக சிந்தனை உண்டு. ஆன்மீக ஆராய்ச்சி ஆன்மிகம் சம்பந்தமாக நீண்ட தொலைவு பயணம்.

ராகு கேதுவும் நாடி ஜோதிட சேர்கை பலன்களும்
பொதுவாக வேத ஜோதிடத்தில் ராகு கேது சேர்கை ஒரு பாவத்தில் சேர்கை பெரும் கிரகங்கள் மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

ஆனால் எந்த ஒரு கிரகமும் தனித்து இயங்காது. ஆகவே ராகு கேது தாங்கள் அமர்ந்த பாவத்திலிருந்து பின்புறமாக 1 5 9 / 2 ஆம் பாவங்களில் இருக்கும் கிரகங்களுடன் சேர்கை பெரும்.


நாடி ஜோதிட முறையில் ராகு கேது சேர்கை பெரும் வீடியோ விளக்க பதிவு கீழே.....

பிறந்த ஜெனன கால ஜாதகத்தில் ராகு மற்றும் கேது எண்ணும் சாயாகிரகங்களுக்கு 2 / 1 5 9 பின்புறமாக உள்ள ராசிகளில் கிரகங்கள் உள்ளவர்கள் கண்டிப்பாக காண வேண்டிய பிருகு நந்தி நாடி ஜோதிட பதிவு...
















   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..

.