Ads Here

வெள்ளி, 20 ஜூலை, 2018

செவ்வாய் தோஷம் பார்ப்பது எப்படி? செவ்வாய் தோஷம் கணிப்பு

செவ்வாய் தோஷம் பார்ப்பது எப்படி?
செவ்வாய் தோஷம் கணிப்பது எப்படி?

சிம்பிள் நண்பர்களே!!!!
ஜெனன கால பிறப்பு ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் லக்னத்திலிருந்து எண்ண வரும் 12 / 1 / 2 / 4 / 5 / 7 / 8 ஆம் பாவங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் அந்த ஜாதகர் செவ்வாய் தோஷம் பெற்றவர் ஆவார். அதாவது செவ்வாய் கிரக குறைபாடு பெற்ற நபர் ஆவார்.

செவ்வாய் கிரக பார்வை 
பொதுவாக அணைத்து கிரகங்களும் 7 ஆம் பார்வையாக 7 ஆம் வீட்டை பார்க்கும்.

சிறப்பு பார்வை பெற்ற கிரகங்கள் 
குரு சனி செவ்வாய் கிரகங்கள் சிறப்பு பார்வை பெற்றுள்ளன. குரு 1 5 9 என்ற சிறப்பு பார்வையும், சனி 3 7 1௦ என்ற சிறப்பு பார்வையும், செவ்வாய் 4 8 என்ற சிறப்பு பார்வையும் பெற்றுள்ளார்.

செவ்வாய் தோஷம்

ஏழு மற்றும் எட்டாம் பாவத்தில் செவ்வாய் இருப்பது 
செவ்வாய் கிரகம் லக்னத்தில் இருந்து எண்ணி வரும் 7 மற்றும் 8 ஆம் வீட்டில் இருந்தால் அது செவ்வாய் தோஷம் ஆகும்.

ஏழு மற்றும் எட்டாம் பாவங்கள் செவ்வாய் பார்வை பெறுவது 
செவ்வாய் தனது பார்வைகளால் களத்திர பாவமான ஏலு மற்றும் ஆயுள் ( மாங்கல்ய ஸ்தானம் ) எட்டாம்  பாவத்தை தான் அமர்ந்த 12/ 1 / 2 / 4 / 5 பாவங்களில் இருந்து பார்வையிடுவதும் செவ்வாய் தோஷம் ஆகும். அதாவது ஏழு மற்றும் எட்டாம் பாவங்கள் செவ்வாய் பார்வை பெறுவதும் செவ்வாய் தோஷம் ஆகும்.

அரைகுறை ஜோதிடர்களின் உளறல் 
அதாவது சந்திரனில் இருந்தும் பார்க்கணும் மற்றும் சுக்கிரனில் இருந்தும் பார்க்கணும் ( மேற்சொன்ன அமைப்பு படி ) அதுவும் செவ்வாய் தோஷம் என்பதும்.

செவ்வாய் தோஷ விதி விலக்குகளாக 16 வகையை கூறுவதும் முட்டாள்தனம்.

ராசி சக்கரங்களுடன் கூடிய செவ்வாய் தோஷ விளக்கங்கள் 
செவ்வாய் தோஷம் கன்னக்கிடும் முறை / செவ்வாய் தோஷ பரிகாரம் / செவ்வாய் தோஷ விதி விலக்குகல் / கண்டால் செவ்வாய் பற்றிய தெளிவு...விரைவில்























 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். கீழே கமென்ட் செய்யவும்..

.